சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் பின்புறம் சீமாத்தம்மன் நகரில் உள்ள மசூதியை இடிப்பதற்கு CMDA ஆணை பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் ஜமாஅத் நிர்வாகிகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் திருமாவளவனை இன்று (10-06-2024) காலை நேரில் சந்தித்து ‘மசூதியை பாதுகாத்திட வேண்டும்’எனக் கோரிக்கை வைத்துள்ளனர். இதனைதொடர்ந்து மசூதி இருக்கும் இடத்தை இன்று மாலையே நேரில் சென்று பார்வை இட்டுள்ளார் திருமா.
முஸ்லிம்களுக்கு, மசூதிகளுக்கு பிரச்சனை என்றால் உடனே ஆஜராகும் திருமா கடந்த மூன்று ஆண்டு திராவிட ஆட்சியில் பல கோவில்கள் இடிக்கப்பட்டது. இதற்கு எதிராக ஒரு அறிக்கை இல்லை ஒரு கண்டனம் தெரிவித்திருப்பாரா ? ஹிந்துக்கள் ஓட்டுகள் மட்டும் வேண்டும் ஆனால் ஹிந்துக்களுக்கோ அல்லது ஹிந்து கோவில்களுக்கோ பிரச்சனை என்றால் நவதுவாரத்தையும் மூடி கொண்டிருப்பார் திருமா.
ஹிந்து கோவில் இடிப்புகள் :-
தாம்பரம் அருகே வரதராஜபுரத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் இடிக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி பலரின் கண்டனத்தைப் பெற்றது. இதற்கு குரல் கொடுத்தாரா திருமா ?
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பட்டணம் கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகளாக இருந்து வந்த வாசுதேவன் கோவில் இடிக்கப்பட்டது. இதற்கு குரல் கொடுத்தாரா திருமா ?
மதுரை அருகே இலங்கிப்பட்டியில் அமைந்து இருந்த வாழவந்தான் அம்மன் கோவில் இடிக்கப்பட்டது. இதற்கு குரல் கொடுத்தாரா திருமா ?
கடந்த நவம்பர் மாதம் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் சிவன் கோவில் ஒன்றை பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு இடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் கண்டனம் பெற்றது. இதற்கு குரல் கொடுத்தாரா திருமா ?
கோவையில் “ஸ்மார்ட் சிட்டி ” திட்டப் பணிகளுக்காக முத்தண்ணன் குளக்கரையில் மரத்தடியில் இருந்த 9 கோவில்கள் இடிக்கப்பட்டது. இதற்கு குரல் கொடுத்தாரா திருமா ?
தஞ்சையில் பிரம்மாண்ட சிவலிங்க சிலை அமைந்திருந்த ஆதிமாரியம்மன் கோவிலை இடித்தனர். இதற்கு குரல் கொடுத்தாரா திருமா ?
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் மழைநீர் வடிகால் பணிகளுக்காக திரேஸ்புரம் பகுதியில் உள்ள ராஜேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் மேட்டுப்பட்டி பள்ளிவாசல் கொடிமரம் ஆகியவை அதிகாரிகளால் அகற்றப்பட்டது. இதற்கு குரல் கொடுத்தாரா திருமா ?