Share it if you like it
கொரோனா பெருந்தொற்று தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் மிக சீக்கிரமாக முழு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. அதற்கான விலையை நாம் வெகு விரைவில் கொடுக்க வேண்டியிருக்கும்’ என உலக சுகாதார அமைப்பின் அவசர சுகாதாரத் திட்டத்தின் தலைவர் மைக்கேல் ரியான் தெரிவித்து உள்ளார்.
தற்பொழுது உருமாற்றம் அடைந்த புதிய வகை வைரசான டெல்டா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. டெல்டா வைரஸ் 100 நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ள நிலையில் மைக்கேல் ரியான் கருத்து மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Share it if you like it