முன்னாள் செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு குளத்திற்கு நடைபாதை மற்றும் படிக்கட்டு மேம்பாட்டு பணிக்காக 11 லட்சத்து 36 ஆயிரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் அது குறித்து வீடியோ ஒன்று நேற்று வெளியிட்டு இருந்தார். அந்த காணொளியில் கோவிலில் உள்ள 4 படிக்கட்டுகளை கட்டுவதற்கு 11 லட்சமா? 12 லட்சத்தில் முழு வீடே கட்டலாமே என பேசியிருந்தார். இந்த காணொளி இணையதளத்தில் படு வைரலானது.
இந்த நிலையில் புதுச்சேரி மகளிர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் காயத்ரி ஸ்ரீகாந்த் என்பவர் அனிதா சம்பத்தை மிரட்டும் தொனியில் சமூக வலைதளப்பாக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கோயிலுக்கு போனோமா, பிரசாதத்தை சாப்டோமான்னு இல்லாம, கருத்து சொல்றேன்னு ஏன் இப்படி மிதி வாங்குறியே பேபிமா… உங்களுக்கு இதெல்லாம் தேவையா? நடைபாதை அமைச்சது உங்கவூட்டு காசுலயா? இவ்வாறு பதிவிட்டிருந்தார்.
திமுக நிர்வாகியான காயத்ரி ஸ்ரீகாந்த் பதிவிற்கு பதிலடி தரும் விதமாக சமூக வலைத்தள பயனர் ஒருவர் அதென்ன உங்க அப்பா வூட்டு காசுலயா கட்டி இருக்கீங்க, மக்கள் வரிப்பணம் தானே? கேள்வி கேட்க அவருக்கு உரிமை இருக்கு! என்று பதிலடி கொடுத்தார். இந்த பதிவை பலரும் லைக் செய்து ஷேர் செய்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் சொந்தமாக கருத்து சொல்ல கூட உரிமை இல்லையா ? உடனே மிரட்டுகிறார்கள் என்று திமுக நிர்வாகி காயத்ரி ஸ்ரீகாந்த்தை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.