தமிழகத்தி கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வருவதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு சுப்பிரமணியன் கூறியிருக்கிறார் ஆனால் கடந்த காலங்களில் மத்திய அரசு தடுப்பூசி விவகாரத்தில் ஓரவஞ்சனை செய்கிறது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு தடுப்பூசியை குறைந்த அளவில் கொடுக்கிறது என பொய் பிரச்சாரம் செய்து மக்கள் மனதில் பிரதமர் மீது வெறுப்பை விதைத்தனர்.
ஆனால் மத்திய அரசு எந்த மாநிலங்களில் நோய் தொற்று அதிகம் உள்ளத்தோ அந்த மாநிலங்களுக்கு தடுப்பூசியை அதிக அளவில் வழங்கியது. மேலும் பாஜக ஆளாத மாநிலமான ராஜஸ்தானில் 11.5 லட்சம் தடுப்பூசியும், சட்டீஸ்கரில் மத்திய அரசு அனுப்பியதில் சுமார் 30% தடுப்பூசியும், காங்கிரஸ் கூட்டணியில் உள்ள ஜார்கண்ட் மாநிலத்தில் சுமார் 37 % தடுபூசியும் வீணடிக்கப்பட்டுள்ளது. ஏன் தமிழகத்தில் கூட அனுப்பிய தடுப்பூசிகள் பல இடங்களில் தேங்கி கிடந்த கதைகளும் நாம் அறிந்ததே.
இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி
‘தொற்று அதிகமுள்ள மாவட்டங்களுக்கு அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகள் அனுப்பப்படுகின்றன’ என, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கூறுகிறார்; இதைத் தானே, மத்திய அரசும் செய்கிறது. அதை ஏன் குறை கூறுகிறீர்கள்? என பதிலளித்துள்ளார்,