வீட்டில் டாய்லெட் பேப்பர் இல்லாவிட்டால், திமுக தேர்தல் அறிக்கையை பயன்படுத்துங்கள் – பங்கமாய் கலாய்த்த அண்ணாமலை !

வீட்டில் டாய்லெட் பேப்பர் இல்லாவிட்டால், திமுக தேர்தல் அறிக்கையை பயன்படுத்துங்கள் – பங்கமாய் கலாய்த்த அண்ணாமலை !

Share it if you like it

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், வரும் மக்களவைத் தேர்தலுக்கான தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை மார்ச் 20, 2024 புதன்கிழமை வெளியிட்டார். அந்த அறிக்கையில்,
சட்டப்பிரிவு 356 ஐ நீக்குதல் மற்றும் இந்திய அரசியலமைப்பின் 361 வது பிரிவை நீக்குதல்; இந்திய உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் நிறுவுதல்; புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து மற்றும் எல்பிஜி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை முறையே ₹500, ₹75 மற்றும் ₹65 ஆக குறைத்தல்.

முஸ்லிம்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துதல்; ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முன்மொழியப்பட்ட கொள்கையை ஒழித்தல் ; குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) திரும்பப் பெறுதல் ; முதலமைச்சர்கள் உட்பட மாநில வளர்ச்சி கவுன்சில் உருவாக்கம்; நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு; தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்றுதல்; ஒரே மாதிரியான குடிமைச் சட்டத்தை அமல்படுத்துவதைத் தடுப்பது மற்றும் நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் ₹1000 உரிமை. இவ்வாறு கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதியையே திமுக நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டுள்ளது. நடைமுறையில் சாத்தியமே இல்லாத அறிக்கைகளை தற்போது திமுக வெளியிட்டு உள்ளது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கையை குறித்து கோவையில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது : திமுகவுக்கு தேர்தல் வருவதும் தேர்தல் அறிக்கை கொடுப்பதும், தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பதை எல்லாம் செய்யாமல் விடுவதும். அதன் பிறகு அடுத்த தேர்தல் வந்ததும் அதே அறிக்கையில் சில மாற்றங்களை செய்வது வாடிக்கைதான்.

முன்பு சிலிண்டர் விலை ரூ 100 குறைக்கிறோம் என போட்டிருந்தால், இப்போது ரூ 500 என போடுவோம். பெட்ரோல் விலையை ரூ 5 குறைப்பதாக சொல்லியிருந்ததை இப்போது ரூ.30 குறைப்பதாக போடுவோம். 2026 ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலில் பெட்ரோலை இலவசமாக கொடுப்போம் என்பார்கள். பெட்ரோல் இலவசம்: வீட்டில் ஹோஸ் போட்டு கொடுத்து விடுவோம், அப்படியே ஹோஸை எடுத்து வண்டியில் நுழைத்தால் போதும் என்பார்கள். உங்கள் வீட்டில் டாய்லெட் பேப்பர் இல்லாவிட்டால் திமுக தேர்தல் அறிக்கையை பயன்படுத்துங்கள். பொட்டலம் கட்டுவதற்கும் இதை பயன்படுத்தலாம் என்று பேசினார்.

மேலும் கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கு எல்லா அமைச்சர்களும் வந்து நூற்று கோடிக்கணக்கான பணத்தை எல்லாம் செலவு செய்வார்கள். நான் மக்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டேன். மக்களை நம்பி, கோவையிலிருந்து மாற்றத்தை தொடங்க வேண்டும் என நம்பி போட்டியிடுகிறேன் என்று பேசினார்.

https://x.com/SivaSubiramani3/status/1771211883749495079?s=20


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *