குடிகாரர் ஒருவர் போக்குவரத்து போலீசாரிடம் ரகளை செய்யும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் மது போதையில் வாகனம் ஓட்டியுள்ளார். இதனை கண்டுபிடித்த போலீசார் அவரை கண்டித்து அபராதம் விதித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குடிகாரர் அபராதம் கட்ட முடியாது என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். குடித்துவிட்டு வாகனம் ஓட்ட கூடாது என்று போலீசார் கூற, “குடிச்சிட்டு வண்டி ஓட்ட கூடாதுனா அப்புறம் எதுக்கு கடையை திறந்து வச்சிருக்கீங்க” எண்டு எதுக்கு அபராதம் போடுறீங்க என்று நியாயமான கேள்வியை கேட்டுள்ளார்.
இவர்களே (அரசே) கடை வைத்து குடிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்குவார்கள். இவர்களே அபராதமும் விதிப்பார்கள். வருமானத்திற்காக தமிழக மக்களை மதுவிற்கு அடிமையாக்குகிறது திமுக அரசு. இவ்வாறு சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.