வேலூர் மாவட்டத்திலுள்ள ஓர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பயிலும் மாணவிகள் சிலர் கும்பலாகச் சேர்ந்து பள்ளியின் மேல்தளத்துக்குச் சென்று ஒரு மாணவிக்கு `வளைகாப்பு’ நிகழ்ச்சி நடத்துவதைபோல ரீல்ஸ் வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் பதிவேற்றம் செய்திருக்கின்றனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் படு வைரலாகிக் கொண்டிருக்கிறது.
அந்த வீடியோவில், மாணவிகள் அனைவரும் பள்ளி சீருடையில்தான் இருக்கின்றனர். ஒரு மாணவிக்கு மட்டும் புடவை அணிவிப்பதைபோல துப்பாட்டாவைச் சுற்றிவிட்டு, வயிற்றுப் பகுதியிலும் துணியை மறைத்து கர்ப்பிணிபோல நடித்துகாட்டச் செய்கின்றனர். பேப்பர்களையும் பூ மாலையைபோல சுற்றி மாணவிக்கு அணிவிக்கின்றனர். கூடியிருந்த மாணவிகள் அனைவரும் தாம்பூலத்தில் ஆரத்தி எடுத்து சந்தனம் பூசுகின்றனர். வளைகாப்புக்குத் தேவையான சிலப் பொருள்களையும் வாங்கி வரிசையாக வைத்திருக்கின்றனர். இதுதொடர்பான காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை எற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் சென்னையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பரம்பொருள் பவுண்டேஷன் நிறுவனரும், யூடியூபருமான மகாவிஷ்ணு என்பவர் ஆன்மிக சொற்பொழிவு நடத்தியதற்கு அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மிகவும் ஆவேசமாக எதிர்ப்பு தெரிவித்து அவரை நான் சும்மா விடமாட்டேன் என்று ஆக்ரோஷமாக பொங்கினார். அப்படி இருக்கும் நிலையில் இந்த சம்பவத்திற்கு அன்பில் மகேஷ் என்ன சொல்ல போகிறார் ? இந்தநிலையில் பள்ளியில் வழகாப்பு நடத்தலாம் ஆன்மிக சொற்பொழிவுதான் நடத்த கூடாதா என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.