தெய்வ விக்ரகங்களின் நிலை குறித்து, ஓய்வு பெற்ற முன்னாள் ஜ.ஜி. பொன்மாணிக்க வேல் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய காணொளி வைரலாகி வருகிறது.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்றவர் ஐ.ஜி. பொன்மாணிக்க வேல். இவர், அண்மையில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறினார் ;
நான் மரணிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஆண்டவன் எனக்கு சக்தி கொடுத்தால் ஒன்று திருக்கோயில்கள், இரண்டாவது செப்பு திருமேனிகளை காப்பாற்றுவது, மூன்றாவது அர்ச்சகர்கள். அதற்கு அடுத்து, 2,500 தெய்வ விக்ரகங்கள் மியூஸியத்தில் காட்சி பொருளாக வைத்து அரசாங்கம் சம்பாரிப்பது கேவலமான தொழில். இந்த விக்ரகங்களை அந்தந்த கோவில்களில் சென்று வைக்க வேண்டும். இதுபோக, 3,50,000 தெய்வ விக்ரகங்களை இன்று வரை பதிவு செய்ய முடியாமல் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் திணறி வருகின்றனர். இவர்கள், எல்லாம் தகுதியில்லாதவர்கள். அந்த விக்ரகங்கள் எல்லாம் அனாதையாக கிடக்கிறது என்று தனது உள்ள குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.