சென்னை கோயம்பேட்டில் உள்ள மசூதி மற்றும் மதரசா கட்டடம் ஆகியவை இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே உடனடியாக அந்த கட்டடத்தை இடிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை கடந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி விசாரித்த உயர் நீதிமன்றம், எந்தவித கட்டட அனுமதியும் பெறாமல் சட்ட விரோதமாக கட்டப்பட்ட மசூதி மற்றும் மதரசா கட்டடத்தை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மசூதி நிர்வாகத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனு, உச்ச உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், கே.வி.விஸ்வ நாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் உச்ச நீதிமன்றமும் மசூதி மற்றும் மதரசா கட்டடங்கள் சட்ட விரோதமாகத்தான் கட்டப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து, அதனை இடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.