பிரசாதத்தில் அசுத்த பொருட்கள் : ஒட்டுமொத்த ஹிந்து சமூகமும் மிகுந்த வேதனையும், ஆத்திரமும் அடைந்துள்ளது – வி.எச்.பி தேசிய பொதுச் செயலாளர் பஜ்ரங் லால் பக்ரா !

பிரசாதத்தில் அசுத்த பொருட்கள் : ஒட்டுமொத்த ஹிந்து சமூகமும் மிகுந்த வேதனையும், ஆத்திரமும் அடைந்துள்ளது – வி.எச்.பி தேசிய பொதுச் செயலாளர் பஜ்ரங் லால் பக்ரா !

Share it if you like it

ஜெகன் மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்புகள் இருந்ததாக சந்திரபாபு நாயுடு குற்றசாட்டை முன்வைத்தார். இந்தநிலையில் ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் மாட்டுக் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் உள்ளிட்டவை இருப்பதாக ஆய்வக அறிக்கை உறுதி செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை எற்படுத்தி உள்ளது.​

இதற்கு ஹிந்துக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக விஎச்பி அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் பஜ்ரங் லால் பக்ரா கூறியிருப்பதாவது :- “இந்துக்களின் மிகவும் புனிதமான ஸ்தலங்களில் ஒன்றான திருப்பதி கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தில் அசுத்தமான பொருட்கள் சேர்க்கப்படுவதாக வெளியான செய்திகளால் ஒட்டுமொத்த இந்து சமூகமும் மிகுந்த வேதனையும், ஆத்திரமும் அடைந்துள்ளது. இந்து சமூக நம்பிக்கையின் மீது மீண்டும் மீண்டும் தாக்குதல்களை நடத்துவதை இனி பொறுத்துக்கொள்ள முடியாது. இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். இதனால்தான் இந்துக் கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது என விஎச்பி நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருவதாக லால் பக்ரா கூறினார். மேலும் கோவில்களில் இந்து அல்லாத அதிகாரிகளை நியமிப்பதால், பிரசாதத்தில் வேண்டுமென்றே அசுத்தங்கள் சேர்க்கப்படுகின்றன, எனவே இந்து வழிபாட்டுத் தலங்கள், அனைத்தும் அரசாங்க கட்டுப்பாட்டிலிருந்தும் விடுவிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் மீண்டும் கோரிக்கை வைக்கிறோம் என்று விஎச்பி அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் பஜ்ரங் லால் பக்ரா தெரிவித்துள்ளார்.

திருப்பதி பிரசாதம் தொடர்பாக, திருப்பதி கோவிலின் முன்னாள் அர்ச்சகர் ரமண தீக்ஷிதுலு கூறுகையில், “பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பசு நெய்யில் அதிக கலப்படம் இருந்ததுடன், தரமில்லாமல் இருந்தது. இதை பல ஆண்டுகளுக்கு முன்பே நான் கவனித்தேன். இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் புகார் அளித்தேன். ஆனால் அதிகாரிகளும், அறக்கட்டளையின் தலைவரும் இதைப் பெரிதாக பொருட்படுத்தவில்லை, ஆனால் தற்போது புதிய அரசாங்கம் ஆட்சியைப் பிடித்துள்ளது. தற்போது உள்ள அரசு, பால் பண்ணைகளில் இருந்து சுத்தமான பசு நெய்யைக் கொண்டு உணவுப் பொருட்களைத் தயாரித்து வருகின்றனர், கோடிக்கணக்கான பக்தர்கள் மிகுந்த நம்பிக்கையும் பக்தியும் கொண்ட புனிதக் கோவிலில் இதுபோன்ற பெரிய பாவங்கள் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *