தமிழகத்தில் இந்து ஆலயங்கள் முன்பிருக்கும் கடவுள் மறுப்பு வாசகங்கள் அகற்றப்படும் !

தமிழகத்தில் இந்து ஆலயங்கள் முன்பிருக்கும் கடவுள் மறுப்பு வாசகங்கள் அகற்றப்படும் !

Share it if you like it

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஸ்ரீரங்கம் ஆலயத்தின் முன்பு கடவுளை நம்புபவன் முட்டாள். கடவுளை பரப்புபவன் காட்டுமிராண்டி என்று இந்து ஆன்மீக நம்பிக்கைகளுக்கு எதிராக பொறிக்கப்பட்டுள்ள வாசகங்கள் அடங்கிய கல்வெட்டு அகற்றப்படும். தமிழகத்தில் இந்து ஆலயங்கள் சூறையாடப்பட காரணமாக இருக்கும் இந்து அறநிலையத்துறைக்கு இறுதி நாளாக இருக்கும் என்றும் அதற்கான முதல் கையெழுத்தை பாஜக ஆட்சியில் போடப்படும் என்றும் அறிவித்துள்ளார். வழக்கமாக தமிழக பாஜக தலைவரின் ஒவ்வொரு அசைவிற்கும் அர்த்தம் தேடும் ஒட்டுமொத்த திராவிட தரப்பும் பேசி வைத்த தொனியில் கனத்த மவுனம் காக்கிறது.

என் மனம் என் மக்கள் என்ற பெயரில் ஊழலுக்கு எதிரான பாதயாத்திரையை தமிழக பாஜக தலைவர் முன்னெடுத்து வருகிறார். இதில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் தனது யாத்திரையை முன்னெடுத்தவர் ஸ்ரீரங்கம் ஆன்மீக நகரில் வரலாறு சிறப்பு வாய்ந்த ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதில் தமிழக முழுவதிலும் பகுத்தறிவு முற்போக்கு வாதம் என்ற பெயரில் இந்து ஆன்மீக நம்பிக்கைகளையும் ஆலய வழிபாடுகள் வழிபாட்டு முறைகளை அவமதிக்கும் விதமான வாசகங்கள் அந்த வாசகங்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் ஆலயங்களின் முன்பு இருந்து அகற்றப்படும் என்று தமிழக மக்களுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார். இதன் மூலம் தமிழகத்தில் அரை நூற்றாண்டு காலம் இந்து ஆன்மீக நம்பிக்கைகள் ஆலயங்கள் வழிபாட்டு உரிமைகளுக்கு எதிராக தொடர்ச்சியாக நிகழ்ந்த அரச பயங்கரவாதத்திற்கு தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நிரந்தரமாக முடிவு கட்டப்படும் என்ற உறுதிமொழியை தமிழக பாஜக தலைவர் தமிழகத்தில் உள்ள சனாதன மக்களுக்கு முன்மொழிந்து உள்ளார்.

பூலோக வைகுண்டம் என்னும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் முன்பு பகுத்தறிவு முற்போக்கு வாதம் என்ற பெயரில் ஒரு சிலையும் கல்வெட்டும் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் கடவுளை நம்புபவன் முட்டாள். அதை பரப்புபவன் காட்டுமிராண்டி என்ற வாசகங்கள் கல்வெட்டாக அடங்கியுள்ளது. ஸ்ரீரங்கம் ஆலயம் வைணவ திவ்ய தேசங்களில் முதலாவது திவ்ய தேசம். அவ்வகையில் உலகெங்கும் உள்ள வைணவ மக்களுக்கு முழுமையான காவிரி கரை திருத்தலம் என்றால் அது ஸ்ரீரங்கமே. அவ்வகையில் அவரவர் வாழ்வில் முக்கிய நிகழ்வுகள் தொடங்கி வாழ்நாளில் ஆன்மீக தரிசனம் வரையிலும் ஒட்டுமொத்த உலக வைணவ மக்களும் ஸ்ரீரங்கத்திற்கு படையெடுப்பார்கள்.

வைணவ மக்களை கடந்து இந்து ஆன்மீக மக்கள் துறவிகள் ஆன்மீகவாதிகள் கலை இலக்கியம் கலாச்சாரம் இதிகாச புராணம் சொற்பொழிவாளர்கள் இந்து ஆன்மீகம் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆலயங்கள் கல்வெட்டுகள் உள்ளிட்டவற்றின் ஆய்வாளர்கள் என்று பழம் பெருமைக்கும் பக்திக்கும் பாரதத்தின் தொன்மையான கலாச்சாரத்திற்குமான ஒரு பெரும் தலைநகரமாகத் தான் ஸ்ரீரங்கம் இருந்து வருகிறது . அதன் காரணமாக இங்கு தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவதும் ஆலயத்தில் ஆன்மீக பக்தி பரவசத்தில் தரிசனம் செய்வதும் இயல்பு. ஆனால் அவர்கள் அத்தனை பேரின் மனதிலும் ஆறாத ரணமாக இருந்தது ஆலயத்தின் வானுயர்ந்த கோபுரத்திற்கு நேர் எதிரில் இந்து ஆன்மீக நம்பிக்கைகளையும் வழிபாட்டுக்களையும் அவமதிக்கும் வகையிலான ஒரு சிலையும் அதன் அடியில் வைக்கப்பட்டிருந்த ஒரு கல்வெட்டும்அத்தனை பேரின் மனதையும் அரித்து கொண்டிருந்தது.

ஜனநாயகம் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் தொடர்ந்து இந்து மதத்தை மட்டும் அவமதிப்பது பகுத்தறிவு முற்போக்கு வாதம் என்ற பெயரில் இந்து ஆன்மீக நம்பிக்கைகள் வழிபாட்டு முறைகளை துவேஷிப்பது என்ற இந்த அரச பயங்கரவாதத்திற்கும் அதன் ஆதரவு கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் என்று முடிவு வருமோ? என்று ஏங்காத அடியார்கள் தமிழகத்தில் இருக்க மாட்டார்கள். அவர் களின் மனக்குமுறலுக்கும் ஆன்மிகம் பிறந்து வளர்ந்த தமிழ் மண்ணிலேயே அதன் மீது தொடுக்கப்பட்ட கருத்தில் பயங்கரவாதத்திற்கும் காலம் கடந்து ஒரு விடிவு பிறந்து இருக்கிறது. அது திராவிடம் பிறந்து ஆன்மீகத்திற்கு எதிராக கருத்தியல் யுத்தம் தொடுத்த அதே தமிழ் மண்ணில் பிறந்து வளர்ந்த கொங்கு மண்டல தமிழன் ஒருவனை அதே ஸ்ரீரங்க ஆலயத்தின் வாயிலில் நிறுத்தி இந்து மக்களையும் அவர்களின் ஆன்மீக நம்பிக்கைகள் வழிபாட்டு முறைகளையும் அவமதிக்கும் இது போன்ற அராஜகத்திற்கு தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது முடிவு கட்டப்படும் என்று அரைக்கூவல் விடுத்திருக்கிறது காலம்.

இதுவரையில் தீபாவளிக்கு பட்டாசு வெடித்தால் பறவைகள் பயப்படும் என்று பேசியவர்கள் உண்டு. ஜெய்ஸ்ரீராம் கோஷம் போட்டால் பாகிஸ்தானின் மனம் புண்பட்டு விடும். ஜெய்ஹிந்த் கோஷம் போட்டால் இங்குள்ள சிறுபான்மை மக்கள் புண்பட்டு விடும் என்று பேச கேட்டிருக்கிறோம். ஆனால் இந்து ஆலயங்களின் முன்பு ஆலயத்தை அவமதிக்கும் ஆன்மீகம் நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் விதமாக வாசகங்கள் இருக்கிறதே? இவையெல்லாம் இங்குள்ள இந்து மக்களை புண்படுத்தாதா? என்று கேட்கவோ பேசவோ நாதியில்லை. ஆனால் அது இங்கு உள்ள மக்களை புண்படுத்துகிறது. அவமதிக்கிறது. அதனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை அப்புறப்படுத்துவோம் என்று தமிழக பாஜக அதன் தலைவர் வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள். இனி இதை எதற்காக எதிர்க்கிறேன் என்று தொடங்கினால் தமிழகத்திலிருந்து மட்டுமல்ல ஒட்டு மொத்த பாரதத்திலிருந்தும் வரும் இந்து ஆன்மீக வாதிகள் மற்றும் இந்து வாக்கு வங்கியை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதால் ஒட்டுமொத்த திராவிடமும் வாய் மூடி மௌனம் காக்கிறது. தமிழகத்தில் இந்து மக்களுக்கான சுதந்திரமும் விடுதலையும் வெகு அருகாமையில் காத்திருக்கிறது.


Share it if you like it