சமூக நீதி பேசும் ஸ்டாலின் ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு கோவிலுக்குள் அனுமதி மறுப்பு !

சமூக நீதி பேசும் ஸ்டாலின் ஆட்சியில் பட்டியலின மக்களுக்கு கோவிலுக்குள் அனுமதி மறுப்பு !

Share it if you like it

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள வழுதலம்பேடு கிராமத்தில் அருள்மிகு எட்டியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடைப்பெற்றது. இந்நிலையில் கும்பாபிஷேக நிகழ்வில் பட்டியலின மக்கள் கலந்துக்கொள்ளக் கூடாது என மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கும்பாபிஷேகத்திற்கு பட்டியலின மக்கள் கொடுத்த பணத்தையும் வாங்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கேத் பல்வந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோர், இரு சமூக மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு எட்டப்படாததால் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சரவணன் என்பவர் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில், பட்டியலின மக்களை வழிபாடு செய்ய விடாமல் தடுத்ததாக வழுதலம்பேடு ஊராட்சி மன்றத் தலைவர் மணிமேகலை, தேவராஜ், ரகுநாதன், சுப்பிரமணி, எட்டியப்பன், முருகன், முனுசாமி ஆகிய 7 பேர் மீது பட்டியலின வன்கொடுமை தடுப்புச் சட்டம், சட்டவிரோதமாக கூடுதல், அரசு அதிகாரி உத்தரவை மீறுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் கும்மிடிப்பூண்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் தருமபுரி, சேலம், புதுக்கோட்டை, சிதம்பரம், திருப்பத்தூர், உட்பட பல மாவட்டங்களில் பட்டியலின மக்களுக்கு எதிரான சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை நமது மீடியானில் செய்திகள் வெளியிடப்பட்டது. இவ்வாறு பட்டியலின மக்களுக்கு எதிரான அவலங்கள் குறைந்தபாடில்லை. வெற்று சமூக நீதி பேசும் திமுக அரசு மேடைதோறும் வசனங்கள் பேசுவதை விட்டுவிட்டு மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்தினால் நல்லது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *