இந்து முன்னணி ஹிந்துக்களின் பண்பாட்டினையும் கலாச்சாரத்தையும் பாதுகாத்து வருகிறது. ஹிந்துக்களின் எழுச்சிக்கு ஊன்று கோலாக இந்து முன்னணி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பல இடங்களிலும் மாட்டிறைச்சி கடைகள் உள்ளிட்ட இடங்களில் பசுக்கள் வெட்டப்படுவது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதனை தடுக்க வேண்டும் என்பதற்காக கோ பூஜை செய்வதும், பசு பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை இந்து முன்னணி மக்களிடம் ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து மக்களிடையே பசுவை போற்ற வேண்டும் என்ற செய்தியைக் கொண்டு செல்ல ஒரு செய்தித் தாள் கடித வடிவில் ஏற்படுத்துவது என முதன் முதலில் நவம்பர் மாதம் 1995 இல் நான்கு பக்க வடிவில் “பசுத்தாய்” எனும் பெயரில் வெளியிடப்பட்டது. அதன் பிறகு பசுத்தாய் மாத இதழாக 1996 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருநாளாம் செப்டம்பர் மாதத்தில் பதிவு பெற்ற பத்திரிகையாக வடிவம் பெற்றது.
தாய் என்பதற்கு பெண்களை ஈர்க்கும் ஒரு சக்தி இருக்கிறது. கோமாதா என்பதை அழகு தமிழில் பசுத்தாய் என்று பெயர் வைத்தனர்.
முதன் முதலில் 3000 சந்தாதாரர்கள் என்ற அளவில் ஆரம்பிக்கப்பட்ட பசுத்தாய், தற்போது 30, 000க்கும் மேற்பட்ட சந்தாதாரர்களையும், லட்சக்கணக்கான வாசகர்களையும் தன்னக்கத்தே கொண்டுள்ளது.
ஆன்மீகத்தோடு, பசு பாதுகாப்பு போன்ற கருத்துக்களோடு, தேச பக்தி, தெய்வ பக்தியை மையமாகக்கொண்டு வாசகர்களின் ஆதரவையும் ஆன்றோர்கள், நல்லோர்களின் நல்லாசியையும் பெற்று பசுத்தாய் மாத இதழ் வெற்றி நடைப் போட்டு வருகிறது.
இந்த நிலையில் பசுத்தாய் மாத இதழின் புதுப்பிக்கப்பட்ட கட்டிட திறப்பு விழா இன்று (22-8-24)சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்றது. அதில் பசுத்தாய் மாத இதழின் ஆசிரியர் பசுத்தாய் கணேசன் அவர்கள் கலந்துக் கொண்டார்.