பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதி திட்டத்தின் கீழ் கடந்த 2022-23 ம் ஆண்டு 15,524 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 5% அதிகம். 2014 ம் ஆண்டு முதல் கடந்த 2023 ம் ஆண்டு வரை 9 வருடங்களில் 1,05,904 கோடி ரூபாய் பொது துறை நிறுவனங்களால் சமூக பொறுப்பு நிதி செலவிடப்பட்டுள்ளதாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில்,
500 கோடிக்கும் அதிக நிகர மதிப்புள்ள நிறுவனங்கள் அல்லது 1000 கோடிக்கும் அதிக வருவாய் உள்ள நிறுவனங்கள் அல்லது 5 கோடிக்கும் அதிக நிகர லாபமீட்டும் நிறுவனங்கள் தங்களின் லாபத்திலிருந்து மூன்று வருட சராசரி நிகர லாபத்திலிருந்து 2% நிதியை சமூக முன்னேற்றத்திற்கு செலவிட வேண்டு என்ற பொறுப்புணர்வு சட்டம் கடந்த 2014 முதல், அதாவது பாஜக ஆட்சியமைத்த ஆண்டு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், பெரு நிறுவனங்களின் பங்களிப்பு சிறப்பை தருகிறது.
கடந்த 2014ம் ஆண்டு சமூக பொறுப்புணர்வு நிதி அளித்த நிறுவனங்கள் 884. கடந்த ஆண்டு வரை அதாவது 9 ஆண்டுகளில் இந்த நிறுவனங்கள் 1296 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு மட்டும் HDFC வங்கி ரூபாய் 820.89 கோடியும், டாடா கன்ஸல்டன்ஸி நிறுவனம் (TCS) ருபாய் 783 கோடியும், ரிலையன்ஸ் நிறுவனம் ரூபாய் 744 கோடியும் சமூக பொறுப்புணர்வு நிதியை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் டாடா ஸ்டீல் ரூபாய்.480.62கோடியும், ONGC நிறுவனம் ரூபாய்.475.89 கோடியும், ICICI வாங்கி ரூபாய்.ரூபாய்.462.66 கோடியும், Infosys நிறுவனம் 391.51 கோடியும், பவர் கிரிட் நிறுவனம் ரூபாய்.321.66 கோடியும், NTPC நிறுவனம் ரூபாய் 315.32 கோடியும் செலவிட்டுள்ளது.
நாட்டின் முன்னேற்றத்தில், மக்கள் நலனில், தனியார் மற்றும் பொது துறை நிறுவனங்களின் பங்களிப்பை இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் உணர்த்துகின்றன. மேலும் இந்த நிறுவனங்களின் பங்களிப்பை உறுதி செய்ய, வழிகாட்ட, பல்வேறு திட்டங்களை வகுத்து, ஒருங்கிணைத்து சமூக முன்னேற்றத்தில், குறிப்பாக விளையாட்டு, சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம், கல்வி போன்ற பல்வேறு துறைகளில் வளர்ச்சியை எட்டுவதற்கு மிகச் சிறந்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. நரேந்திர மோடி அவர்களின் பல்வேறு சாதனைகளில் சமூக பொறுப்புணர்வு நிதி அடித்தட்டு மக்களுக்கு சென்றடைய செய்த சாதனையும் ஈடு இணையில்லாதது. இனியாவது, வேலைவாய்ப்பு, கட்டமைப்பு மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு தூணாக விளங்கும் பெரு நிறுவனங்களை குறைசொல்வதை விட்டு விட்டு, அவர்களின் பங்களிப்பை பாராட்ட எதிர்க்கட்சிகள் குறிப்பாக கம்யூனிஸ்டுகள் முன்வரவேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.