இந்தியாவில் படிப்படியாக குறையும் கொரோனா தொற்று!

இந்தியாவில் படிப்படியாக குறையும் கொரோனா தொற்று!

Share it if you like it

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:

இந்தியாவில் புதிதாக 6,934 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 63,380 ஆக உள்ளது. இது 0.14 சதவீதமாகும். தினசரி பாதிப்பு விகிதம் 3.52% வாராந்திர பாதிப்பு விகிதம் 5.42% என்றளவில் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் 24 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,31,369 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9,213 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 4,43,11,078 பேர். தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதம் 98.67 சதவீதம்.

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 95.21 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.87 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும் அடங்கும். கடந்த 24 மணி நேரத்தில் 4,943 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share it if you like it