இந்திய துணைத் குடியரசு தலைவர், திரு .ஜகதீப் தன்கர், டாமன் டையூவில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையைத் திறந்து வைத்தார். பின்னர் இதனை தொடர்ந்து ஐஎன்எஸ் குக்ரி கப்பலை பார்வையிட சென்றிருந்தார். அங்கு அவர் பேசியதாவது :-
நமது நாட்டில் முதன்முறையாக நமது பாதுகாப்பு உற்பத்தியில் முன்னுதாரண மாற்றம் ஏற்பட்டுள்ளது.
நம்மிடம் சொந்தமாக விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உள்ளன.
2019ல் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசிய வகையிலான ஏவுகணைகள் தற்போது நம்மிடம் உள்ளன.
கடற்படையில் நமது கப்பல்கள் ஒருபோதும் தோற்கடிக்கப்படாது. நமது நாட்டின் பாதுகாப்பு தன்மைகள் உயர்ந்த நிலையில் உள்ளன. இந்தியாவும் பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் நாடு என்பதை ஒவ்வொரு இந்தியரும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தத் துறையில் பல நாடுகளை நாம் கைபிடித்து வருகிறோம்.
விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலாகத்தான் நமக்குத் தெரிந்தது, ஆனால் இப்போது விக்ராந்த் பழைய விக்ராந்த் அல்ல, புதியதாக மாறியுள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில், நமது நாட்டில் இயக்கப்பட்ட போர் கப்பல்களின் எண்ணிக்கை எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.