பா.ஜ.க. நிர்வாகி தலைக்கு ரூ.1 கோடி: ‘இன்குலாப்’ ஆணவம்!

பா.ஜ.க. நிர்வாகி தலைக்கு ரூ.1 கோடி: ‘இன்குலாப்’ ஆணவம்!

Share it if you like it

பா.ஜ.க. நிர்வாகி நுபுர் ஷர்மா தலையை கொய்து வருபவர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று ஏ.ஐ.எம்.ஐ.எம். இன்குலாப் அமைப்பு அறிவித்திருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் நுபுர் ஷர்மா. பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்து வருகிறார். இவர், கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்த தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் பேசியபோது, முகமது நபி பற்றி சர்ச்சைக்குரிய ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். மேலும், இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்திலும் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். இதற்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இது குறித்த புகார்களின் அடிப்படையில், நுபுர் ஷர்மா மீது மும்பை போலீஸார் வழக்கும் பதிவு செய்திருக்கின்றனர். எனினும், நுபுர் ஷர்மாவுக்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தரப்பிலிருந்து தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்தும் நுபுர் ஷர்மா தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

இந்த நிலையில்தான், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த தெஹ்ரீக் இ லப்பை அமைப்பைச் சேர்ந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள், நுபுர் ஷர்மாவை கொலை செய்யும் இஸ்லாமியர்களுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். மேலும், ஹைதராபாத்தைச் சேர்ந்த லோக்கல் கட்சியான அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (இன்குலாப்) கட்சியின் தலைவரும், வழக்கறிஞருமான குவாவி அப்பாஸி, ஏ.எல்.டி. என்கிற தனியார் ஊடகத்தில் வெளியிட்ட காணொளியில், “முகமது நபியைப் பற்றி இழிவான மற்றும் அருவருப்பான கருத்துக்களை வெளியிடும் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்க இஸ்லாத்தில் உத்தரவு இருக்கிறது. ஆகவே, முகமது நபியை இழிவாகப் பேசிய வாசீம் ரஸ்வி தலைக்கு 1 கோடி ரூபாய் பரிசு அறிவித்தேன். அதேபோல, தற்போது நுபுர் ஷர்மாவின் தலைக்கும் 1 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கிறேன்.

மேலும், பா.ஜ.க. நிர்வாகி நுபுர் ஷர்மாவை ‘ஒயிட் காலர் விபச்சாரி’ என்று விமர்சித்திருக்கும் அப்பாஸி, “ராமரை மணந்தபோது சீதையின் வயது என்ன? என்று நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன். அவளுக்கு வயது 6. தசரத மன்னனுக்கு எத்தனை மனைவிகள்? 100-க்கும் மேல். உங்கள் மதத்தை நாங்கள் அம்பலப்படுத்த ஆரம்பித்தால், நீங்கள் சாலையில் நடமாட முடியாது. பா.ஜ.க. ஆண் மற்றும் பெண் விபசாரிகளின் கூடாரமாக மாறிவிட்டது. உங்கள் பதிவுகள் எங்களிடம் உள்ளன. ஆண் பா.ஜ.க. தொண்டர்கள் பெண்களை எப்படி எல்லாம் சுரண்டுகிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். இறந்தவர்களை பற்றி நாங்கள் நிந்தனை செய்வதில்லை. இதைத்தான் இஸ்லாம் எங்களுக்குக் கற்றுத் தருகிறது. நான் நுபுர் ஷர்மா தலைக்கு 1 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக நிர்ணயம் செய்திருக்கிறேன். நுபுர் ஷர்மாவை கொலை செய்பவர்களுக்கு இத்தொகை பரிசாக வழங்கப்படும். நான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்தக் காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, ஏ.எல்.டி. ஊடகத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர்தான், தனக்கு எதிராக இஸ்லாமியர்களை கட்டவிழ்த்து விடுவதாக குற்றம்சாட்டி இருக்கும் நுபுர் ஷர்மா, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக டெல்லி போலீஸில் புகார் அளித்திக்கிறார். இது தொடர்பாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.


Share it if you like it