பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜி7 நாடுகள் இணைந்து உருவாக்கிய எப்.ஏ.டி.எப்., எனப்படும் நிதி நடவடிக்கை பணிக் குழு செயல்பட்டு வருகிறது. உலக அளவில் நடக்கும் சட்ட விரோத பண பரிமாற்றம் மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளிப்பதை தடுக்கும் நடவடிக்கையில் இந்த குழு ஈடுபட்டு வருகிறது.
இந்த குழு, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளை ஊக்குவிப்பது, பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி வருவதை தடுக்காமல் இருப்பது, பயங்கரவாதிகளுக்கு ஓய்வூதியம் அளிப்பதாக இந்தியாவின் குற்றச்சாட்டு போன்ற காரணங்களுக்காக பாகிஸ்தானை ‘கிரே’ பட்டியலில் 2018-ஆம் ஆண்டு சேர்த்தது. இந்நிலை கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வந்த நிலையில் இந்த ஆண்டும், பாகிஸ்தான் ‘கிரே’ பட்டியலில் தொடரும் என எப்.ஏ.டி.எப்., தெரிவித்துள்ளது இதனால் சர்வதேச நிதி உதவியை பெற முடியாத நிலை பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது.