வேகமாக வளரும் இந்திய பொருளாதாரம்!

வேகமாக வளரும் இந்திய பொருளாதாரம்!

Share it if you like it

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக இருப்பதாக ஐ.நா. தெரிவித்திருக்கிறது.

ஐ.நா. பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை, உலக பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில், கொரோனா தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் மீண்டு வருகின்றன. ஆனால், ரஷ்யா – உக்ரைன் போரால் அந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, நடப்பு சர்வதேச பொருளாதார வளர்ச்சி மறுமதிப்பீடு செய்யப்பட்டு 4 சதவிகிதத்தில் இருந்து, 3 சதவிகிதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும், போர் காரணமாக உலகளவில் பணவீக்கமும் கடந்த 10 ஆண்டு சராசரியை விட இரு மடங்கு உயர்ந்து 6.7 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தாண்டு தெற்காசிய பொருளாதார மதிப்பீடு 0.4 சதவிகிதம் குறைக்கப்பட்டு, 5.5 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இப்பிராந்தியத்தில் இந்திய பொருளாதாரம் 2021-ம் ஆண்டில் 8.8 சதவிகிதம் வளர்ச்சி கண்டது. இந்தாண்டு பணவீக்க உயர்வு மற்றும் தொழில்துறை முழுமையாக மீட்சி அடையாத காரணத்தால், இந்திய பொருளாதார வளர்ச்சி 0.3 சதவிகிதம் குறைந்து 6.4 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், உலகளவில் இந்தியா வேகமான பொருளாதார வளர்ச்சியை அடைந்து வரும் நாடாக விளங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Share it if you like it