250 விமானங்களை வாங்குவது தொடர்பாக, பிரான்ஸிடம் இந்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர் பஸ் நிறுவனத்திடம் இருந்து, 250 விமானங்களை ஏர் இந்தியா வாங்கு உள்ளது. அந்த வகையில், இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதற்கான, நிகழ்ச்சி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, பிரதமர் மோடி இவ்வாறு பேசினார் ; இந்தியா – பிரான்ஸ் இடையில் உள்ள ஆழமான உறவையும், விமான போக்குவரத்தில் இந்தியாவின் வெற்றியையும், இந்த ஒப்பந்தம் காட்டுகிறது. உதான் திட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள நீண்ட தூரத்தில் உள்ள நகரங்கள் வான் போக்குவரத்து மூலம் இணைக்கப்படுகிறது. இது, பொருளாதாரத்திற்கும், மக்களின் சமூக வளர்ச்சிக்கும் உதவுகிறது.
விமானத்துறை தொடர்பான பாகங்கள் உற்பத்தி துறையில், ‘மேக் இன் இந்தியா’ – மேக் பார் வோர்ல்ட்’ கொள்கையின் கீழ் ஏராளமான வாய்ப்புகள் இந்தியாவில் உள்ளன. இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை ஆகட்டும், சர்வதேச உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார பாதுகாப்பு ஆக்கட்டும், இந்தியாவும், பிரான்சும் ஒருங்கிணைந்து நேர்மறையான பங்களிப்பை அளிக்கின்றன என பேசினார். 250 விமானங்களும், இந்தியாவிற்கு வரும் பட்சத்தில் சாதாரண மக்களும் விமானப்பயணம் மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.