இந்தியா மிகச் சிறந்த டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் நிதி கட்டமைப்பை உருவாக்கியுள்ளது என்று நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார அறிஞர் மைக்கேல் ஸ்பென்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்து மைக்கேல் ஸ்பென்ஸ் பேசுகையில், “தற்போது இந்தியா உலகின் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருப்பதுடன், பெரும் வளர்ச்சிக்கான ஆற்றலையும் கொண்டுள்ளது. சிறந்த டிஜிட்டல்பொருளாதாரத்தையும் நிதி கட்டமைப்பையும் இந்தியா உருவாக்கியுள்ளது. இந்தியாவின் போட்டித் தன்மை அதிகரித்துள்ளது” என்று குறிப்பிட்டார்.
உலகப் பொருளாதாரப் போக்குகுறித்து பேசிய அவர், “கடந்த 70 ஆண்டுகளாக இருந்துவந்த பொருளாதார கட்டமைப்பு தற்போது மாற்றம் அடைந்து வருகிறது. கரோனா, சர்வதேச அரசியல் பிரச்சினைகள், காலநிலை மாற்றம் ஆகியவை இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணிகளாக உள்ளன.