பெண் கல்விக்குத் தடை: தாலிபான்கள் அதிரடி! குரல் கொடுப்பார்களா ‘ஹிஜாப்’ போராளிகள்?

பெண் கல்விக்குத் தடை: தாலிபான்கள் அதிரடி! குரல் கொடுப்பார்களா ‘ஹிஜாப்’ போராளிகள்?

Share it if you like it

பெண்களுக்கு படிப்பு தேவையில்லை என்று சொல்லி, திறந்த ஒரு மணி நேரத்திலேயே பள்ளிகளை மூடிவிட்டனர் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றி இருக்கும் தாலிபான்கள். இந்தியாவில் ஹிஜாப்புக்காக குரல் கொடுத்த போராளிகள், தற்போது ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்காக குரல் கொடுப்பார்களா என்று கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சியை முறியடித்துவிட்டு 1996-ல் ஆட்சியைக் கைப்பற்றினர் தாலிபான்கள். இது ஆப்கானிஸ்தான் வரலாற்றில் கரும்புள்ளி என்று கருதப்பட்டது. மத அடிப்படைவாதிகளான தாலிபான்கள் கண்மூடித்தனமான மத நம்பிக்கை கொண்டவர்கள். இதனால், அங்கு காட்டாட்சி நடைபெற்றது. பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. தாலிபான்களுக்கு எதிராக நடப்பவர்கள், கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். மத நம்பிக்கையை பின்பற்றாதவர்களும், அவமதிப்பவர்களும் சிரச்சேதம் செய்யப்பட்டார்கள். எனினும், அந்நாட்டு விவகாரத்தில் எந்த நாடும் தலையிடவில்லை. ஆனால், 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்க தலைநகர் நியூயார்க் நகரிலிருந்த இரட்டை கோபுரங்களை விமானம் மூலம் தாக்கி தகர்த்தனர் அல்கொய்தா தீவிரவாத அமைப்பினர். அதேபோல அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பது.

இத்தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடன். அவன், ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பாதுகாப்பில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஒசாமா பின்லேடனை தங்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டது அமெரிக்கா. ஆனால், தாலிபான்கள் மறுத்துவிட்டனர். இதனால், ஆத்திரமடைந்த அமெரிக்க அரசு, ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி தாலிபான்களை நாட்டை விட்டே விரட்டி அடித்ததோடு, ஒசாமா பின்லேடனையும் கொன்றது. இதன் பிறகு, ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. பெண்களும் கல்வி கற்க அனுமதிக்கப்பட்டது. மேலும், ஆப்கானிஸ்தான் அரசுக்கு பக்கபலமாக அமெரிக்க படைகள், நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானிலேயே முகாமிட்டிருந்தன.

இந்த நிலையில்தான், மீண்டும் துளிர்தெழுந்த தாலிபான்கள், ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இதன்பிறகு, நேட்டோ படைகளும், அமெரிக்க படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து, 2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர் தாலிபான்கள். அந்நாட்டின் அதிபர் மற்றும் துணை அதிபர் ஆகியோர் அண்டை நாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டனர். அதேசமயம், தங்கள் நாட்டில் மீண்டும் தீவிரவாதிகளை அனுமதிக்க மாட்டோம் என்று அமெரிக்காவிடம் உறுதியளித்த தாலிபான்கள், பெண் கல்விக்கு அனுமதி அளிக்கப்படும் என்று அந்நாட்டு மக்களிடமும் உறுதியளித்திருந்தனர். இதனால், மக்களும் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், ஆட்சியைக் கைப்பற்றி ஓராண்டுகளாக அமைதியாக இருந்த தாலிபான்கள் மீண்டும் தங்களது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கி இருக்கிறார்கள். ஆம், திறந்த ஒரு மணி நேரத்திலேயே பெண்கள் பள்ளிகளை மூட உத்தரவிட்டிருக்கிறார்கள். இதனால், பெண் குழந்தைகள் கண்ணீர் விட்டு கதறி அழுதபடியே வீடு திரும்பி இருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, தாலிபான்கள் பெண்களின் உரிமையைப் பறிப்பதாகக் கூறி, அந்நாட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது இப்படி இருக்க, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த மாணவிகள் சிலர், ஹிஜாப், பர்தா, புர்கா ஆகியவற்றை அணிந்து வந்ததால் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, ஹிஜாப்புக்கு தடை விதித்தன அரசும், நீதிமன்றமும். இதனால் ஆத்திரமடைந்த அடிப்படைவாதிகள், ஹிஜாப் எங்கள் உரிமை, கடமை என்று சொல்லி, ஆர்ப்பாட்டம், போராட்டம் என பொங்கினார்கள். ஆகவே, பெண்களின் ஹிஜாப்புக்காக இந்தியாவில் பொங்கிய அடிப்படைவாத போராளிகள், தற்போது ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கல்வியே மறுக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆப்கன் அரசுக்கு எதிராக குரல் கொடுப்பார்களா? என்கிற கேள்வி எழுப்பி வருகிறார்கள் சமூக வலைத்தளப் போராளிகள்.


Share it if you like it