திராவிட கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு எதையாவது சர்ச்சையாக பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் திமுக அமைச்சரான ஆ.ராசா மேடை பேச்சில் இந்தியா ஒரு நாடே அல்ல என்று பிரிவினை வாத முறையில் பேசிய காணொளியானது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த காணொளியில், “இந்தியா ஒரு நாடே அல்ல ; இந்தியா எப்போதும் ஒரு நாடே அல்ல” என்று பிரிவினை வாதம் ஏற்படும் வகையில் பேசினார். மேலும் சமீபத்தில் மணிப்பூர் மக்கள் நாய்கறி சாப்பிடுபவர்கள் என்று திமுக நிர்வாகி ஆர்.எஸ் பாரதி பேசிய கருத்தானது பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆ. ராசாவும் மணிப்பூரில் நாய்க்கறி சாப்பிடுகிறார்கள், உண்மைதான், இன்னமும் சாப்பிட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். இது அவர்கள் பண்பாடு என்று மணிப்பூர் மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ள காணொளியானது பெரும் பேசுபொருளாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக அண்ணாமலை X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :
கற்பனையான சூழ்நிலைகளை உருவாக்குவதும், பிரிவினைவாத எண்ணங்களால் மக்களின் மனதில் நஞ்சூட்டுவதும் திராவிட அரசியலின் அடித்தளமாக உள்ளது.
ஐ.என்.டி.ஐ. தேர்தலுக்குப் பிறகு நாடு பிளவுபட வேண்டும் என்று கூட்டணி உறுப்பினர் தி.மு.க.
1963ல் புதைக்கப்பட்ட திமுகவின் பிரசாரம் ஒருபோதும் தலைதூக்க அனுமதிக்காது, ஐ.என்.டி.ஐ.யை வன்மையாகக் கண்டிக்கிறோம். நமது நாட்டை உடைக்க மற்றும் வெளிநாட்டு ஏஜெண்டுகளின் கைப்பாவையாக செயல்படும் அதன் தீவிர முயற்சிகளுக்கான கூட்டணி.
https://x.com/annamalai_k/status/1764902380691509579?s=20