முஸ்லிம்கள் இந்திய ராணுவத்தில் சேரக் கூடாது என்று மதப் பள்ளியில் மூளைச் சலவை செய்வது தற்போது அம்பலமாகி இருக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை, மதச் சார்பற்ற நாடு என்பதால் ஹிந்துக்கள் மட்டுமல்லாது முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் இந்திய ராணுவத்தில் இடம் பெற்றிருக்கிறார்கள். மத்திய அரசும் இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் ராணுவத்தில் சேர வழிவகை செய்து கொடுத்திருக்கிறது. நிலைமை இப்படி இருக்க, இஸ்லாமிய மதப் பள்ளிகளில் முஸ்லிம்கள் யாரும் இந்திய ராணுவத்தில் சேரக்கூடாது. ஏனெனில், ராணுவத்தில் சேர்ந்தால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளை எதிர்த்து போரிட வேண்டி இருக்கும். அவர்கள் நமது மதத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு முஸ்லிமை இன்னொரு முஸ்லிம் கொல்லக் கூடாது என்று மூளைச்சலவை செய்து வரும் தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்கர் அலி. 24 வயது இளைஞரான இவர், கேரளாவிலுள்ள இஸ்லாமிய மையம் ஒன்றில் மதம் சார்ந்த 12 வருட படிப்பு பயின்றார். படிப்பு முடிந்த கையோடு, முஸ்லிம் மதத்தில் இருந்து வெளியேற முடிவு செய்திருக்கிறார். காரணம், மதம் சார்ந்த படிப்பைப் படித்தாலும் முற்போக்கு சிந்தனையுடன் செயல்படத் தொடங்கினார். எனவே, முற்போக்கு சிந்தனை கொண்ட அமைப்பு ஒன்று கொல்லத்தில் நிகழ்ச்சியை நடத்தியது. இதில் அஸ்கர் அலியை சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேச அழைத்தது. ஆனால், அஸ்கர் அலியின் இந்த செயல்பாடு அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் பிடிக்கவில்லை. எனவே, இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசக்கூடாது என்று அவரை தடுத்தனர்.
எனினும், எதிர்ப்பையும் மீறி அஸ்கர் அலி பேசுவதற்காக சென்றார். இதனால் ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினரும், உறவினர்களும், அப்பகுதி வாசிகளும் அஸ்கர் அலியைப் பின் தொடர்ந்து கொல்லத்திற்குச் சென்றனர். அங்கு அஸ்கர் அலி தங்கியிருந்த விடுதிக்குச் சென்றவர்கள், அவரை அழைத்துக் கொண்டு கொல்லம் கடற்கரைக்கு வந்திருக்கிறார்கள். பின்னர், தயாராக நின்ற காரில் ஏறும்படி கூறியிருக்கிறார்கள். இதற்கு அஸ்கர் அலி மறுக்கவே, அவரை வலுக்கட்டாயமாக காருக்குள் தள்ளி சரமாரியாக தாக்கி இருக்கிறார்கள். அவர் சத்தம் போடவே, கடற்கரையில் நின்றவர்கள் திரண்டதோடு, போலீஸாரும் வந்து விட்டனர். இதனால் அக்கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது. இதுகுறித்து அஸ்கர் அலி கொல்லம் கிழக்கு போலீஸில் புகார் செய்திருக்கிறார்.
இதுகுறித்து அஸ்கர் அலி கூறுகையில், “மதக் கல்வி படிப்புக்கு 8 முதல் 10 வயதுவரை உள்ள குழந்தைகள் சேர்கிறார்கள். இது 12 ஆண்டு படிப்பு. அங்கு அவர்கள் அனுபவிக்கும் உளவியல் மற்றும் உடல் ரீதியான பிரச்னைகள் குறித்து வெளியில் சொல்ல முடிவதில்லை. குடும்பத்தில் போய் சொன்னாலும், மதமே பிரதானமாக நம்பும் குடும்பங்கள் அதை உணர்ந்து கொள்வதில்லை. குறிப்பாக, மத வகுப்பறையில் ராணுவத்தில் சேரக்கூடாது என்று கற்றுத்தரப்படுகிறது. காரணம், ராணுவத்தில் சேர்ந்தால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாட்டினர் மீது தாக்குதல் நடத்த வேண்டிவரும். அவர்கள் நமது மதத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை கொல்லக் கூடாது என்று போதிக்கப்படுகிறது. உண்மையான பாசிசமே இஸ்லாம்தான் இதையெல்லாம்தான் கொல்லம் கூட்டத்தில் பேசினேன். இன்னும், இன்னும் பேசுவேன்” என்றார்.