பாராலிம்பிக்ஸ்ஸில் சாதனை படைத்த இந்தியா !

பாராலிம்பிக்ஸ்ஸில் சாதனை படைத்த இந்தியா !

Share it if you like it

பாரிஸ் பாராலிம்பிக்ஸ் தொடர் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. கடைசி நாளான நேற்று பல்வேறு போட்டிகள் நடந்து வரும் நிலையில், இந்திய வீரர்கள், வீராங்கனைகளின் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. மொத்தமாக பாராலிம்பிக்ஸ் தொடரில் 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் என்று 29 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியது.

இதன் மூலமாக பதக்கப் பட்டியலில் இந்தியா 18வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த பாராலிம்பிக்ஸ் தொடரில் இந்தியா 19 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்த நிலையில், இம்முறை கூடுதலாக 10 பதக்கங்களை வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. அதேபோல் டோக்கியோ பாராலிம்பிக்ஸ் தொடரில் 24வது இடத்தை பிடித்த இந்தியா, இம்முறை 18வது இடத்திற்கு முன்னேறி இருப்பதும் இந்தியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *