புதிய பார்லிமென்ட்டில் தேசிய நினைவுச் சின்னம்: பிரதமர் மோடி திறப்பு!

புதிய பார்லிமென்ட்டில் தேசிய நினைவுச் சின்னம்: பிரதமர் மோடி திறப்பு!

Share it if you like it

இந்தியாவின் புதிய பார்லிமென்ட் கட்டடத்தின் மைய மண்டபத்தின் மேற்கூரையில் அமைக்கப்பட்டிருக்கும் தேசிய நினைவு சின்னத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

டெல்லியில் தற்போது செயல்பட்டுவரும் நாடாளுமன்றக் கட்டடம் 93 ஆண்டுகள் பழமையானது. குறிப்பாக, இந்தியாவின் வரலாற்றுச் சின்னங்களில் இந்த நாடாளுமன்றமும் ஒன்றாகும். ஆகவே, இக்கட்டடத்தை இடிக்காமல் அதன் அருகிலேயே புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக, சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. இத்திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டடம், மத்திய தலைமைச் செயலகம் ஆகியவை டாடா நிறுவனம் சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய நாடாளுமன்றத்தில் மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும், கூட்டுக் கூட்டத்திற்கு 1,272 இடங்களும் இடம் பெறும்.

971 கோடி ரூபாய் மதிப்பில் 62,000 சதுர மீட்டரில் முக்கோண வடிவில் இந்த புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இது நில அதிர்வு ஏற்பட்டாலும் தாங்கக்கூடிய வகையில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்படுகிறது. குளிர்கால கூட்டத் தொடருக்குள் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மைய மண்டபத்தின் மேற்கூரையில் 6.5 மீட்டர் உயரமும், 9,500 கிலோ எடையும் கொண்ட வெண்கலத்திலான தேசிய சின்னம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஸ், பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த புதிய கட்டடம் 4 தளங்களை கொண்டதாக நவீன வசதியுடன் கட்டப்பட்டு வருகிறது.



Share it if you like it