டெல்லியில் மோடி தலைமையில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி இல்லத்தில் இன்று (ஜூன் 7) நடைப்பெற்று கொண்டிருக்கிறது. முதலில் பிரதமர் மோடி வந்தவுடன் இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை வணங்கினார். பின்னர் ஒவ்வொரு அரசியல் தலைவர்கள் பேச தொடங்கினர். உலகின் சக்தி வாய்ந்த தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார் ‘ என தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கூறினார்.
டில்லியில் பழைய பார்லிமென்ட் வளாகத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்கள் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பேசுகையில்,
உலகளவில் சிறந்த தலைவர் பிரதமர் மோடி. எனது 40வருட அரசியல் பயணத்தில் பல அரசியல் தலைவர்களை பார்த்துள்ளேன். ஆனால் பிரதமர் மோடியை போல் யாரையும் கண்டு வியந்ததில்லை. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் மகத்தான வளர்ச்சி அடைந்துள்ளோம். பிரதமர் மோடி கூறியது போல், உலகளவில் 2047 ல் இந்தியா வளர்ந்த மற்றும் வல்லரசு நாடாக மாறும். உலகின் சக்தி வாய்ந்த தலைவர் பிரதமர் மோடி. சரியான நேரத்தில் சரியான தலைவரை இந்தியா மீண்டும் தேர்வு செய்துள்ளது. மோடியின் பிரசாரம் ஆந்திராவில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இந்தியாவை உலகளவில் பெருமைப்படுத்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு முழுப் புகழையும் என்னால் அளிக்க முடியும். அதுவே நாட்டிற்கு அவர் செய்த மிகப்பெரிய சாதனை. அவரது தலைமையின் கீழ், நாங்கள் இப்போது, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தை அடைந்துவிட்டோம், அவர் இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றப் போகிறார் , நீங்கள் உலகில் எங்கு சென்றாலும், அதிக தனிநபர் வருமானம் ஈட்டுவது இந்தியர்களால் தான், எதிர்காலத்தில் இந்தியர்கள் உலகத் தலைவர்களாக மாறுவார்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் பேசியதாவது: இந்தியர்களின் அனைத்து விருப்பங்களையும் பிரதமர் மோடி நிறைவேற்றுவார். இம்முறை எதிர்க்கட்சி வரிசையில் அமரும் ‛இண்டியா’ கூட்டணி கட்சியினர் அடுத்த முறை அடுத்த முறை அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடையும். பிரதமராக மோடியை தேர்வு செய்வதில் ஐக்கிய ஜனத தளம் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறது. மோடியின் தலைமையில் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. மோடி எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் நாங்கள் உறுதுணையாக இருப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
அமித்ஷா பேசுகையில், “பிரதமர் பதவிக்கு மோடியை முன்னிறுத்துவது இங்கு அமர்ந்திருக்கும் தலைவர்களின் விருப்பம் மட்டுமல்ல. இது நாட்டிலுள்ள 140 கோடி மக்களின் முன்மொழிவு. இது அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிரதமர் மோடி நாட்டை வழிநடத்தும் நாட்டின் குரல்” என்று தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது :- “நாடாளுமன்றக் குழுத் தலைவராக என்னை தேர்வு செய்துள்ள அனைவருக்கும் நன்றி. புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து மக்களவை உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துகள். தேசிய ஜனநயாக கூட்டணி(NDA) வெற்றிக்காக இரவு, பகல் பாராமல் உழைத்தவர்களுக்கு எனது சிரம்தாழ்ந்த நன்றிகள், வெயிலையும் பொருட்படுத்தாமல் வெற்றிக்காக உழைத்தவர்களுக்கு தலை வணங்குகிறேன்” என உணர்ச்சி பொங்க கூறினார்.
நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில், ஜன சேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் பேசியதாவது :- மோடி ஜி நீங்கள் உண்மையிலேயே தேசத்தை ஊக்கப்படுத்துகிறீர்கள். நீங்கள் இந்த நாட்டின் பிரதமராக இருக்கும் வரை, எங்கள் நாடு யாருக்கும் அடி பணியாது…” என்று கூறினார்.
லோக் ஜனசக்தி கட்சியின் (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான் பேசியதாவது :- “நமது பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்துகிறேன். உங்களால்தான் என்டிஏ கூட்டணி இந்த மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் பெருமை உங்களையே சேரும். உங்களுடைய மன உறுதிதான் வெற்றியை உறுதி செய்தது. வரலாற்றில் இவ்வளவு மகத்தான வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்துள்ளது என்பது சாதாரண விஷயம் அல்ல. இந்தியா நாட்டின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது என்று பெருமையுடன் கூறுவேன். இந்திய மக்கள் உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.