இந்தியாவை திடீரென புகழ்ந்து தள்ளிய இம்ரான்கான்!

இந்தியாவை திடீரென புகழ்ந்து தள்ளிய இம்ரான்கான்!

Share it if you like it

பாகிஸ்தான் பிரதமர் இந்தியாவை புகழ்ந்து இருப்பது உலக நாடுகளின் புருவத்தை உயர்த்தியுள்ளது.

கொரோனா பிடியில் சிக்கி வல்லரசு நாடுகளே கதி கலங்கி நின்ற பொழுது, தமது அண்டை நாடுகள் மற்றும் பல ஏழை நாடுகளுக்கும் சேர்த்து மருத்துவ உதவிகளை செய்த ஒரே நாடு இந்தியா என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. மேலும், பாரதப் பிரதமராக மோடி பதவி ஏற்ற பின்பு இந்தியாவின் வளர்ச்சி, மதிப்பு, பொருளாதாரம் ஆகியவை அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தீவிரவாதிகள் மூலம் இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் இன்று அடங்கி ஒடுங்கி சமாதான பேச்சிற்கு வருமாறு நம்மை அழைத்து வருகிறது.

இந்தியாவுடனான அனைத்து போரிலும் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்துள்ளது என பாகிஸ்தான் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் அண்மையில் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கதறி இருந்தார். இதன்மூலம், இந்தியாவின் வலிமையை நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். உலகின் எந்த ஒரு கடினமான சூழ்நிலையையும் முறியடிக்கும் வீரம் இந்திய ராணுவ வீரர்களிடம் உள்ளதை தற்பொழுது உலக நாடுகள் நன்கு உணர்ந்துள்ளன. சீனா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளையும் ஒரே சமயத்தில் நமது எல்லை பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் மிகவும் துணிச்சலாக எதிர்க்கொண்டு வருவதே சிறந்த சான்று. இதுநாள் வரை, இந்தியாவிற்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த பாகிஸ்தான் இன்று மெல்ல மெல்ல இந்தியாவின் வளர்ச்சியை கண்டு அதற்கு ஆதரவாக பேசும் நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், எந்த ஒரு வல்லரசு நாடும் இந்தியாவுக்கு கட்டளையிட முடியாது. இந்தியர்கள் மிகவும் சுயமரியாதை கொண்டவர்கள், என இம்ரான்கான் கூறியுள்ளார். இதுநாள் வரை பாரத தேசத்திற்கு எதிராக அலறி வந்த பாகிஸ்தான் பிரதமர் இன்று இந்தியாவை புகழ்ந்து தள்ளி இருப்பது உலக நாடுகள் மத்தியில் மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it