நாடு முழுவதும் பி.எஃப்.ஐ. அமைப்புக்கு தடை?!

நாடு முழுவதும் பி.எஃப்.ஐ. அமைப்புக்கு தடை?!

Share it if you like it

இஸ்லாமிய அமைப்பான பி.எஃப்.ஐ. பல்வேறு மாநிலங்களில் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், நாடு முழுவதும் தடை செய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இந்தியா முழுவதும் எஸ்.டி.பி.ஐ. என்கிற இஸ்லாமிய கட்சி செயல்பட்டு வருகிறது. இதன் கிளை அமைப்புதான் பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியா (பி.எஃப்.ஐ.). இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கெனவே, புலனாய்வுப் பிரிவு 2010-ம் ஆண்டில் பி.எஃப்.ஐ. பற்றி அலசி ஆராய்ந்து அந்த அமைப்பு தடை செய்யப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத மாணவர் இஸ்லாமிய இயக்கத்துடன் (சிமி) இணைந்து செயல்படும் இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு என்றது. மேலும், சிட்டிசன்ஸ் ஃபோரம் கோவா, சமூக மற்றும் கல்விச் சங்கம் ராஜஸ்தான், நாக்ரிக் அதிகார் சுரக்ஷா சமிதி மேற்கு வங்காளம், லியோங் சோஷியல் ஃபோரம் மணிப்பூர் மற்றும் சமூக நீதி சங்கம் ஆந்திரா போன்ற அமைப்புகள் பி.எஃப்.ஐ.யின் வளர்ந்து வரும் நெட்வொர்க்கின் ஒரு பகுதியாகும் என்று தெரிவித்தது.

பின்னர், 2017-ம் ஆண்டில் தேசிய புலனாய்வு நிறுவனம் (என்.ஐ.ஏ.) உள்துறை அமைச்சகத்திடம் ஒரு விரிவான அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு, கேரள பேராசிரியர் கொலை வழக்கு, கேரளா லவ் ஜிஹாத் வழக்கு உள்ளிட்டவற்றில் பி.எஃப்.ஐ.க்கு தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ. கூறியிருக்கிறது. மேலும், முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிரான சிறிய பிரச்னைகளில் கூட இந்த அமைப்பினர் தலையிட்டு எதிர்வினையாற்றி வருகின்றனர். இந்த அமைப்பைச் சேர்ந்த போராளிகளுக்கு கத்திகள், வாள்களைப் பயன்படுத்தி போர் பயிற்சியும் அளிக்கப்படுகிறது என்றும் என்.ஐ.ஏ. கூறியிருக்கிறது. இதன் பிறகுதான், பி.எஃப்.ஐ. மீதான தடைக்கான கோரிக்கைகள் புதிய உத்வேகத்தைப் பெற்றன. இதன் காரணமாக, பல்வேறு மாநிலங்களில் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டிருக்கிறது. தற்போது, இந்த அமைப்பைத் தடை செய்ய முழு மூச்சாக இறங்கி இருக்கிறார் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன்.

இந்த சூழலில்தான், கடந்தவாரம் நடந்த ராமநவமி ஊர்வலத்தின்போது, கோவா, குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஹிந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் வன்முறை வெடித்தது. இதற்கு முக்கியக் காரணம், பி.எஃப்.ஐ. அமைப்புதான். குறிப்பாக, மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோனில் தீவைப்பு மற்றும் கல்வீச்சுக்கு காரணம் பி.எஃப்.ஐ.தான் என்று அம்மாநில பா.ஜ.க. தலைவர் வி.டி.சர்மா, ஏப்ரல் 14-ம் தேதி குற்றம்சாட்டி இருந்தார். அதேபோல, பா.ஜ.க. யுவ மோர்ச்சா தலைவர் தேஜஸ்வி சூர்யாவும், பி.எஃப்.ஐ. வகுப்புவாத பதட்டத்தை தூண்டுவதாக குற்றம்சாட்டினார். காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் உள்ள கரௌலியில் கல்வீச்சு நடந்த இடத்திற்குச் சென்ற சூர்யா, “பி.எஃப்.ஐ. போல எங்கள் கைகளில் ஆயுதங்களோ, கற்களோ இல்லை. நியாயமான ஊர்வலம் மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்கவும் நாங்கள் விரும்பினோம்” என்றார்.


Share it if you like it