இந்தியாவில் ராமநவமி, ஹனுமன் ஜெயந்தி விழாவை சீர்குலைத்தது போல உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகையையும் இஸ்லாமிய அடிப்படை வாதிகள் சீர்குலைத்திருக்கும் தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
உலகம் முழுவதுமே இஸ்லாமிய பயங்கரவாதம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், சிரியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் யார் உண்மையான முஸ்லிம் என்பதில் தங்களுக்குள்ளேயே அடித்துக் கொள்ளும் நிலையில், இதர நாடுகளில் பிற மதத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். சமீபகாலமாக இந்த பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் வன்முறைகள் அதிகரித்திருக்கிறது. 2047-ல் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவோம் என்று அடிப்படைவாதிகள் கூறிவருகின்றனர்.
இதை மெய்ப்பிக்கும் வகையில், இந்தியாவில் பல்வேறு வன்முறை சம்பவங்களை அரங்கேற்றி வருகிறார்கள். இம்மாதம் 2-ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சைக்கிள் பேரணி சென்றபோது, இஸ்லாமிய அடிப்படை வாதிகள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டதோடு, ஹிந்துக்களின் வீடுகளுக்கு தீயும் வைத்தனர். அதேபோல, கடந்த வாரம் நடந்த ராமநவமி விழாவின்போதும், நேற்று முன்தினம் நடந்த ஹனுமன் ஜெயந்தி விழாவின் பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டதோடு, ஆங்காங்கே தீவைத்து பொதுசொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தினார்கள். மேலும், துப்பாக்கிச்சூடும் நடத்தினர். இதில், ஏராளமான ஹிந்துக்களும், போலீஸாரும் காயமடைந்தனர்.
இந்தியாவில் மட்டும்தான் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பயங்கரவாத செயல்கள் அரங்கேறி வருகிறது என்று பார்த்தால், உலகம் முழுவதும் இதுபோன்ற பயங்கரவாதத்தில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. அதாவது, உலகம் முழுவதிலுமுள்ள கிறிஸ்தவர்கள் நேற்று ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடினார்கள். இதை சீர்குலைக்கும் விதமாக கல்வீதியும், வன்முறையை அரங்கேற்றியும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள். குறிப்பாக, டெல்லியைப் போலவே ஸ்வீடனிலும் போலீஸ் வாகனங்களுக்குத் தீவைத்திருக்கிறார்கள். அதேபோல, ஸ்பெயினில் ஈஸ்டர் பண்டிகையை சீர்குலைக்கும் விதமாக தாக்குதல் நடத்தியதோடு, தடுக்க முயன்ற போலீஸார் மீதும் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இஸ்ரேலிலும் இதே நிலைதான். இப்படி உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பயங்கரவாத செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, ஈஸ்டர் பண்டிகையையொட்டி இஸ்ரேலில் உள்ள மலைக் கோயிலுக்கு பஸ்ஸில் வந்தவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள் பாலஸ்தீனிய முஸ்லீம்கள். இப்படி இஸ்லாமிய பயங்கரவாதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், உலக நாடுகள் யோசிக்கத் தொடங்கி இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பாகக் கருதப்படும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதேபோல, உலக நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்.