உச்சத்தில் உட்கட்டமைப்பு பங்குகள்!

உச்சத்தில் உட்கட்டமைப்பு பங்குகள்!

Share it if you like it

இந்தியாவில் உட்கட்டமைப்புப் பணிகள் வேகமெடுத்து இருக்கின்றன. இதன் காரணமா, உட்கட்டமைப்பு பங்குகள் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக அனைத்துத் துறைகளும் பல்வேறு வகையான கடும் சவால்களை எதிர்கொண்டது. இதில் குறிப்பாக, இன்ஃபரா எனப்படும் உட்கட்டமைப்புத் துறை மிகுந்த விழ்ச்சியை சந்தித்தது. இது உலகின் பல்வேறு நாடுகளின் வளர்ச்சியில் இன்னும் ஸ்தம்பிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதேசமயம், நம் நாட்டின் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நல்ல முடிவுகளை எடுத்த காரணத்தாலும், நிதிப் பற்றாக்குறையை சிறப்பான முறையில் கையாண்டதாலும் இந்தியா மட்டும் அனைத்து துறைகளிலும் தற்போது நல்ல முன்னேற்றத்தை அடைந்து வருகிறது.

குறிப்பாக, உட்கட்டமைப்பு துறையை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு நாடு முழுவதும் பல வகையான கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில், புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அணைக்கப்பட்டு வருவதோடு, 4 வழி சாலைகளை 6 மற்றும் 8 வழிச் சாலைகளாக விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. தவிர, பல புதிய எக்ஸ்பிரஸ் சாலைகளும் போடப்பட்டு வருகின்றன. அதோடு, ஜல் ஜீவன் எனப்படும் நீர் மேலாண்மைத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராம மக்களின் விட்டிற்கே குடிநீர் வசதி செய்து வருகிறது. மேலும், வட கிழக்கு மாநிலங்களில் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை துணிச்சலாக செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக உட்கட்டமைப்புத் துறை சார்ந்த பங்குகள் வீழ்ச்சியில் இருந்து தற்போது உயரத் தொடங்கியுள்ளன.

இதிலும் குறிப்பாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இன்ஃரா, பி.என்.சி. இன்ஃரா, கேல்டா படேல், ஜே.எஸ்.டபியூ., கே.என்.ஆர். இன்ஃரா போன்ற பங்குகள் மற்றும் கட்டமைப்பு தொடர்பான  சிமென்ட் துறை, ஸ்டில் இண்டஸ்ட்ரீஸ் போன்றவை  நல்ல முன்னேற்றம் அடைய வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, சிமென்ட் மற்றும் ஸ்டீல் துறை நல்ல வளர்ச்சியைக் கண்டு வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இதன் பங்குகள் 30% முதல் 80% வரை உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, முதலீட்டாளர்கள் உட்கட்டமைப்புத் துறை சார்ந்த பங்குகளை நீண்டகால அடிப்படையில் முதலீடு மேற்கோள்வது நன்மை பயக்கும்.


Share it if you like it