பி.எஃப்.ஐ.யை தடை செய்ய வேண்டும்: சூஃபி முஸ்லீம் வாரியம்!

பி.எஃப்.ஐ.யை தடை செய்ய வேண்டும்: சூஃபி முஸ்லீம் வாரியம்!

Share it if you like it

அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்துக் கொண்டு இந்திய முஸ்லீம்களை பயங்கரவாத செயல்களுக்கு தூண்டும் பி.எஃப்.ஐ. அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று சூஃபி முஸ்லீம் வாரியம் வலியுறுத்தி இருக்கிறது.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த சூஃபி இஸ்லாமிய வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் காஷிஷ் வார்சி, “பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா பல ஆண்டுகளாகவே இந்திய முஸ்லீம்களை பயங்கரவாத செயல்களை ஈடுபட தூண்டிவிடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. பி.எஃப்.ஐ. அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கிறது. அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலேயே இவர்கள் செயல்படுகிறார்கள். மேலும், பி.எஃப்.ஐ. பல்வேறு தேச விரோத செயல்களில் ஈடுபட்டிருக்கிறது. ஆகவே, அந்த அமைப்பைத் தடை செய்யுமாறு நாங்கள் அரசாங்கத்திடம் பல வருடங்களாக கோரிக்கை வைத்து வருகிறோம்.

பி.எஃப்.ஐ அமைப்பை நாங்கள் தடை செய்ய வலியுறுத்தி வருவதால், சூஃபி இஸ்லாமிய வாரியத்தின் உறுப்பினர்கள் சிலருக்கு அல் கொய்தா பயங்கரவாத அமைப்பிடமிருந்து கொலை மிரட்டல்கள் வருகின்றன. இதன் மூலம், பி.எஃப்.ஐ. அமைப்பினருக்கும் அல் கொய்தா பயங்கரவாத அமைப்பினருக்கும் தொடர்பு இருப்பது உறுதியாகி இருக்கிறது. ஆகவே, பி.எஃப்.ஐ. அமைப்பை தடை செய்து, அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

ஏற்கெனவே, 2020-ம் ஆண்டு பி.எஃப்.ஐ. அமைப்பு, தனது அரசியல் பிரிவான சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) மூலம் முஸ்லீம் இளைஞர்களை ஜிஹாத் செய்ய பயங்கரவாதிகளாக மாற்றுவதற்காக ‘பள்ளிகளை’ நடத்துவதாகவும் சூஃபி இஸ்லாமிய வாரியமும் குற்றம் சாட்டியது. இதற்காக, தியாகத்திற்குப் பிறகு ஜன்னத்தில் உள்ள ’72 மணிகள்’ என்ற நம்பிக்கையை இந்த அமைப்பினர் ஏற்படுத்தி வருகின்றனர். அதாவது, ’72 மணிகள்’ என்பது பரலோகத்தில் இருக்கும் 72 கன்னிப்பெண்கள் என்பது இஸ்லாமியர்களிடையே உள்ள நம்பிக்கை.

பயங்கரவாதிகள் ஜிஹாத்தில் இறந்து ஜன்னத் (சொர்க்கம்) செல்லும்போது, ​​அவர்களின் பாலியல் ஆசைகளை பூர்த்தி செய்ய அவர்களுக்கு இந்த 72 கன்னிப் பெண்கள் வெகுமதி அளிக்கப்படுவதாக நம்பிக்கை. ஐ.எஸ்.ஐ.எஸ்., அல் கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகள், இந்த வாக்குறுதியை பயன்படுத்தி, புதிய பயங்கரவாதிகளை தங்களது இயக்கத்தில் சேர்த்து வருகிறார்கள். ஆகவே, இந்தியாவில் பி.எஃப்.ஐ. அமைப்பை தடை செய்யும்வரை ஓயமாட்டோம் என்று சூஃபி இஸ்லாமிய வாரியம் கூறியிருந்தது.

இது ஒருபுறம் இருக்க, சமூக ஜனநாயகக் கட்சி (SDPI) மற்றும் அதன் தாய் அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) ஆகியவை பயங்கரவாத அமைப்புகள் என்பதில் சந்தேகமில்லை. இவை எதிர்காலத்தில் தடை செய்யப்பட வேண்டிய அமைப்புகள் என்று கேரள உயர் நீதிமன்றமும் சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், பி.எஃப்.ஐ. அமைப்பை தடை செய்ய மத்திய அரசும் பரிசீலனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.


Share it if you like it