தாஜ் மஹாலில் மூடப்பட்டிருக்கும் 22 அறைகளை திறந்து ஆய்வு செய்யக் கோரிய மனுவை அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான பழமையான மசூதிகள், முகலாயர்கள் படையெடுப்பு முன்பு ஹிந்து கோயில்களாக இருந்தவை என்பது ஹிந்துக்களின் வாதமாக இருந்து வருகிறது. அந்த வகையில், அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, ராமர் கோயிலை இடித்து கட்டப்பட்டது என்று கூறப்பட்டது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில், அந்த இடத்தை ஆய்வு செய்யும்படி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி நடந்த அகழ்வாராய்ச்சியில், அங்கு ராமர் கோயில் இருந்ததற்காக அடையாளங்கள் இருப்பதாக பிரபல தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கே.கே.முகமது தலைமையிலான குழுவினர் கண்டறிந்தனர். இதையடுத்து, கோர்ட் உத்தரவுப்படி அந்த இடம் ராமஜென்ம பூமி என்ற அறிவிக்கப்பட்டு, தற்போது, அங்கு ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது.
அதேபோல, காசியில் மசூதி இருக்கும் இடம் கிருஷ்ண ஜென்ம பூமி என்று கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கும் நடந்து வருகிறது. தவிர, குதுப்மினார் மசூதி இருக்கும் இடம் 24 ஹிந்து கோயில்களை இடித்து கட்டப்பட்டதற்கான எச்சங்கள் இருப்பதாக, மேற்கண்ட தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கே.கே.முகமது தெரிவித்திருக்கிறார். இத்போல, உத்தரப் பிரதேசம் ஆக்ராவில் இருக்கும் உலகப் புகழ் பெற்ற தாஜ்மஹால் ஒரு காலத்தில் ‘தேஜா மகாளயா’ என்ற பெயரில் சிவன் கோயிலாக இருந்ததாகவும், அதை இடித்து விட்டு புதிதாக கட்டடம் கட்டப்படு தாஜ்மஹால் என்று பெயர் மாற்றப்பட்டதாகவும் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூறிவருகின்றனர். மேலும், தாஜ்மகாலின் அடிப்புறம் இருக்கும் 22 அறைகளுக்குள் பழமையான ஹிந்து தெய்வங்களின் சிலைகள் இருப்பதாகவும் கூறிவருகின்றனர். இதற்கு வரலாற்று ஆசிரியர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் கடந்த 9-ம் தேதி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தாஜ்மஹாலில் மூடிவைக்கப்பட்டிருக்கும் 22 அறைகளில் ஹிந்து தெய்வங்களின் சிலைகள் உள்ளதாக அறிகிறோம். ஆகவே, சிவன் கோயில் இருந்ததற்காகன ஆதாரங்களை கண்டறிய அந்த அறைகளை திறந்து காட்ட உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த அறைகளின் கதவுகள் பூட்டி வைக்கப்பட்டிருக்கிறது என இந்திய தொல்லியல் துறைபதில் அளித்துள்ளது. ஆகவே, மூடப்பட்டுள்ள அறைகளுக்குள் என்ன உள்ளது என்பதை அறிய உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்து, மூடப்பட்டுள்ள அறைகளை திறந்து ஆய்வு செய்ய, தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த மனுவை கோர்ட் ஏற்றுக்கொண்டதாகவும், வருகிற 12-ம் தேதி விசாரணைக்கு வரும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதால், இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் இந்து மகாசபையினர் தாஜ்மஹால் முன்பு பொதுமக்களுக்கு லட்டு வழங்கினர்.
Super