இந்திய குடிமக்கள் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செல்ல முடியும் !

இந்திய குடிமக்கள் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செல்ல முடியும் !

Share it if you like it

Henley & Partners என்ற சர்வதேச ஆய்வு நிறுவனம் இந்த உலகில் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் பட்டியலை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி உலக அளவில் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் குறியீட்டில் (Henley Passport Index) 80வது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் இந்த தரவரிசையின் மூலம் இந்திய குடிமக்கள் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செல்ல முடியும். உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் தரவரிசை பட்டியலில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய 6 நாடுகளும் கூட்டாக முதலிடத்தை தக்க வைத்துள்ளன. இந்த நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள், எந்த விசா பிரச்சனையும் இல்லாமல் 194 நாடுகளுக்கு மேல் சுதந்திரமாக பயணிக்க முடியும்.

உலகில் அதிக பயணக் கட்டுப்பாடுகள் கொண்ட நாடுகளின் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது. அந்நாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் வெறும் 28 நாடுகளுக்கு மட்டுமே செல்லமுடியும். அதற்கு அடுத்த இடத்தில் உள்ள சிரியா நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 29 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். ஈராக் நாட்டின் விசா வைத்திருப்பவர்கள் 31 நாடுகளுக்கும், பாகிஸ்தானின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 34 நாடுளுக்கும் விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும்.


Share it if you like it