பாக்.கிற்கு எதிராக கேட்ச் ‘மிஸ்’: அர்ஷ்தீப் சிங் மீது காலிஸ்தானி முத்திரை?

பாக்.கிற்கு எதிராக கேட்ச் ‘மிஸ்’: அர்ஷ்தீப் சிங் மீது காலிஸ்தானி முத்திரை?

Share it if you like it

பாகிஸ்தானுக்கு எதிராக கேட்ச்சை தவறவிட்ட கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங், ஒரு காலிஸ்தானி என்று விக்கிபீடியாவில் புரொஃபைல் எடிட் செய்யப்பட்டிருக்கும் சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

ஆசியக் கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஹாங்காங், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 6 நாடுகள் பங்கேற்றிருக்கின்றன. இத்தொடரின் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி. இதைத் தொடர்ந்து, சூப்பர் 4 சுற்று போட்டியில் மீண்டும் பாகிஸ்தானை எதிர்கொண்டது இந்திய அணி. நேற்று இரவு நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி அபாரமாக ஆடி, 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியில், கேப்டன் பாபர் (14), பகர் ஜமான் (15) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த ஏமாற்றினார்கள். இதன் பிறகு, இந்திய பவுலர்கள் தடுமாறவே, ரிஸ்வானும், நவாஸும் சுலபமாக ரன்களை சேர்த்தனர். எனினும், நவாஸ் 42 ரன்களுக்கு அவுட்டாக, ரிஸ்வானும் (71) ஹர்திக் பந்தில் நடையைக் கட்டினார். இதையடுத்து, 3 ஓவருக்கு 37 ரன்கள் தேவை என்கிற நிலையில், இரு அணிகளில் வெல்லப் போவது யார் என்கிற பரபரப்பை ஏற்பட்டது. இந்த சூழலில், 18-வது ஓவரின் 3-வது பந்தை ரவி பிஷ்னோய் வீச, ஆசிப் அலி துாக்கி அடித்தார். இந்த மிகவும் எளிதான கேட்ச்சை இந்த அணி வீரர் அர்ஷ்தீப் சிங் நழுவவிடவே, ஆட்டத்தின் போக்கே மாறியது.

புவனேஷ்வர் குமார் வீசிய 19-வது ஓவரில், ஆசிப் அலியும், குஷ்தில் ஷாவும் சிக்ஸர், ஃபோர் என அடித்து 19 ரன்கள் எடுத்தனர். இதனால், பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 182 ரன்கள் எடுத்து எளிதான வெற்றியை பெற்றது. இந்த சூழலில்தான், கேட்ச்சை தவறவிட்ட அர்ஷ்தீப் சிங் ஒரு காலிஸ்தானி என்று பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சிலர் சமூக வலைத்தளங்களில் மோசமாக விமர்சித்து வருகின்றனர். மேலும், விக்கிபீடியா இணையதளத்திலும், அர்ஷத் சிங்கின் பக்கத்தில் இந்தியர் என்பதை நீக்கிவிட்டு, காலிஸ்தானி என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இதன் மூலம் இந்திய அணியில் பிரிவினையை ஏற்படுத்த முயல்கின்றனர்.

இந்த விவகாரம் மத்திய அரசின் கவனத்திற்குச் சென்றது. இதைத் தொடர்ந்து, விக்கிபீடியா நிறுவனத்திற்கு மத்திய ஐ.டி. அமைச்சகம் சம்மன் அனுப்பி இருக்கிறது. இச்செயல் பிரிவினையைத் தூண்டும் வகையில் அமைந்திருப்பதால், எப்படி மாற்றம் செய்ய அனுமதிக்கப்பட்டது என்பது குறித்து விளக்கமளிக்கும்படி மேற்படி நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


Share it if you like it