செய்தி ஊடகம் என்ற பெயரில் சீனா ஆதரவு கருத்தியல் பிடிபட்ட ஊடகம் – வெளிப்படும் ஊடக தேசதுரோகம்

செய்தி ஊடகம் என்ற பெயரில் சீனா ஆதரவு கருத்தியல் பிடிபட்ட ஊடகம் – வெளிப்படும் ஊடக தேசதுரோகம்

Share it if you like it

பொதுவாக இங்கு நமக்கு பகைநாடு என்றாலே அனைவரின் மனதிலும் பாகிஸ்தான் தான் முதல் இடம் பெறும் . ஆனால் பாரதத்தை எதிர்த்து நேரடியாக களமிறங்கவோ எல்லா துறைகளிலும் போட்டி போடும் அளவிலோ பாகிஸ்தான் எப்போதும் சம பலத்துடன் இருந்ததில்லை. ஆனாலும் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் விடும் அளவில் பாகிஸ்தானின் பயங்கரவாதம் இருந்ததன் பின்னணியில் இவ்வளவு காலங்கள் பல நாடுகள் இருந்திருக்கிறது. அதில் சீனா ஒரு முக்கியமான நாடு. சீனாவின் நேரடியான ஆதரவும் பங்களிப்பும் ஒத்துழைப்பும் தான் பாகிஸ்தானை சர்வதேச அளவில் பெரும் நெருக்கடி இன்றி பல காலம் காப்பாற்றி வந்தது . ஆனால் பாரதத்தின் சமீபகாலமான பேரெழுச்சி வளர்ச்சி பண மதிப்பிழப்பு காரணமாக பாகிஸ்தானை திவால் ஆக்கிய அதிரடி நடவடிக்கைகள் காரணமாக இனி பாகிஸ்தான் எந்த காலத்திலும் சுயமாக மேலெழ முடியாது என்பதை உணர்ந்து கொண்டுதான் சீனா பாகிஸ்தானை கைகழுவியது. அதே நேரத்தில் பாரதத்தின் வளர்ச்சியை பொறுக்க முடியாத சீனா அதை எப்பாடு பட்டேனும் தடுக்க வேண்டும் என்ற முயற்சியில் பல இடங்களில் தானே களமிறங்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்திருக்கிறது. சமீபகாலமாக அப்படி சில விஷயங்களில் அது களமிறங்கியதன் வெளிப்பாடுதான் தற்போது புது தில்லியில் ஒரு செய்தி தளத்தில் பணத்தை விநியோகித்து அதன் மூலம் பாரத எதிர்ப்பு சீன ஆதரவு கருத்தியலை பரப்புவதற்கு சீனா பின்னணியில் இருந்தது அம்பலமாகி இருக்கிறது.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் இந்திய ராணுவத்திடம் அத்துமீறி நடத்திய தாக்குதல் அதில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களின் மரணம் இதையெல்லாம் பாரதத்தின் தோல்வியாக சீனாவின் வெற்றியாக சீனாவில் கொண்டாடியதை விட அதிகமாக பாரதத்தின் உள்நாட்டில் சீன ஆதரவாளர்கள் கொண்டாடிய விதம் ஒவ்வொரு தேசியவாதியையும் மனம் பதைக்க செய்தது. கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு இங்குள்ள ஒவ்வொருவரின் பாதுகாப்புக்காக எல்லையில் உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தையும் அவர்களின் இழப்புக்களையும் கூட மலிவான அரசியல் செய்து தேசவிரோத கருத்துக்களை பரப்புபவர்கள் நிச்சயம் சாதாரண பின்னணி கொண்டவர்களாக இருக்க முடியாது. இதன் பின்னே சர்வதேச அளவில் பெரும் சதி இருக்கும் என்ற சந்தேகமும் அச்சமும் எழுந்தது .அது இன்று உண்மையாகி இருக்கிறது.

கத்தியின்றி ரத்தமின்றி கருத்தியல் ரீதியாக ஒரு நாட்டு குடிமக்களிடம் ஆழ்மனதில் ஊடுருவி அவர்களின் மூலமாகவே அந்த நாட்டுக்கு எதிரான பெரும் குழப்பத்தை உண்டாக்கி அதன் மூலம் அந்த தேசத்தின் அனைத்து கட்டமானங்களையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தன் பிடிக்குள் கொண்டு வரும் ஒரு சூழ்ச்சி. பிரிட்டிஷார் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் வியாபாரத்திற்காக வந்தவர்கள் நேரடியாக ஆட்சியை கைப்பற்றி பொருளாதார சமூகம் அரசியல் என்று அனைத்து வழியிலும் அடிமைப்படுத்தி சுரண்டினார்கள். ஆனால் இந்த நவீன சுரண்டல் என்பது நேரடியான ஆட்சி இருக்காது. நேரடியான யுத்தம் ஆக்கிரமிப்பு இருக்காது .ஆனால் மறைமுகமாக எல்லா துறையிலும் ஆதிக்கம் செலுத்தும். தேசத்தின் உயர் மட்ட நிர்வாகம் தொடங்கி அடி ஆழம் வரை அனைத்து துறைகளிலும் இந்த சீன ஆதரவு நிலைப்பாட்டையே எல்லா இடங்களிலும் எதிரொலிக்கும். அதன் அடிப்படையிலேயே ஆட்சி நிர்வாகம் அரசு எந்திரம் மக்களின் மனோபாவம் எல்லாம் வலுக்கட்டாயமாக கட்டமைக்கப்படும். இதன் மூலம் நாளடைவில் பாரதம் என்ற ஒரு தேசம் அதன் சுயசார்பு அடையாளம் பாரம்பரியம் கலாச்சாரம் அனைத்தையும் அதன் மக்கள் வழியாகவே துடைத்தெறியப்பட்டு பெயரளவில் பாரதம் என்ற அடையாளமும் முழுமையாக அது ஒரு சீனாவின் காலனி ஆதிக்கமாகவும் மாறி இருக்கும். இந்த கருத்தியலை அடிப்படையாகக் கொண்டுதான் சீனா பாரதத்தின் உள் ஊடுருவி தனது முகவர்கள் மூலமாக அத்தனை சீரழிவுகளையும் செய்து வருகிறது.

சென்னையில் மகாபலிபுரம் திருவிடவெந்தையில் நடைபெற்ற இந்திய ராணுவ கண்காட்சியை துவக்கி வைக்க பிரதமர் மோடி வருகை தந்த போது அவரின் வருகைக்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்புகள் தமிழகத்தில் வெளிப்படையாக வீதியில் இறக்கியது கருப்பு பதாகைகள் கருப்பு ஆடை அணிந்து போராட்டம் கருப்பு பலூன் பறக்க விடுதல் திரும்பிய பக்கம் எல்லாம் பொதுவெளிகள் ஊடகங்கள் சமூக ஊடகங்கள் வழியாக கோ பேக் மோடி என்னும் வாசகம் என்று மோடி எதிர்ப்பு பாஜக எதிர்ப்பு என்ற பெயரில் இவர்கள் செய்ததெல்லாம் அப்பட்டமான இந்திய எதிர்ப்பும் தேசவ விரோதமும் மட்டும்தான். இதன் பின்னணியில் இருந்தவர்கள் பெரும்பாலானவர்கள் அந்நிய மதம் சித்தாந்தம் சார்ந்தவர்கள் .அவர்கள் அப்பட்டமான இந்து இந்திய விரோதிகள். ஆனால் இவை பின்னணியில் சீன ஆதரவும் அல்லது வேறு ஏதோ ஒரு தேசத்தின் உளவு பின்னணியும் இருக்கக் கூடும் என்ற சந்தேகம் அப்போதே எழுந்தது. அவையெல்லாம் தற்போது ஊர்ஜிதமாகிறது.

புது தில்லியில் நியூஸ் கிளிக் இந்தியா செய்தி சேனலின் மீது எடுத்திருக்கும் நடவடிக்கையை கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. ஜனநாயகத்திற்கு ஆபத்தை விளைவிக்க கூடியது .இதன் மூலம் மத்திய அரசு அவர்களுக்கு எதிரான கருத்துக்கள் விமர்சனங்களை முன்வைப்பவர்களை எல்லாம் தேசவிரோதிகளாக சீன ஆதரவாளர்களாக சித்தரிக்க முயல்கிறது. இதன் மூலம் அவர்கள் மீதெல்லாம் தேச துரோக குற்றம் சுமத்தி ஊடகத்துறையில் இருந்து அவர்களை அப்புறப்படுத்த பார்க்கிறது .தங்களின் அடிவருடிகள் ஆதரவு கருத்துக்கள் மட்டுமே ஊடக தளத்தில் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு மத்திய அரசு செயல்படுகிறது .அதன் மூலம் பாஜக மோடி அரசு தனது அதிகாரத்தை பாதுகாப்பு முகமைகள் மூலமாக துஷ்பிரயோகம் செய்து வருகிறது என்று நிறைய பேர் வரிசை கட்டி வருவார்கள். அவர்கள் அத்தனை பேரின் பின்புலங்களையும் அவர்களின் சீன ஆதரவு நிலைப்பாடு இந்திய எதிர்ப்பு நிலைப்பாடு எல்லாவற்றையும் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளுங்கள் .இன்று புது தில்லியில் நிகழ்ந்த சோதனை நாளை அவர்களின் அலுவலகத்தில் நிகழும் போது புது தில்லியில் வாங்கப்பட்ட பணப்பரிமாற்றம் அதில் இருக்கும் விவகாரங்கள் சம்பந்தப்பட்ட தலையீடுகள் விட பன் மடங்கு ஆழமாகவும் தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடும் வகையிலான நிகழ்வுகளையும் இந்த ஜனநாயகம் கருத்து சுதந்திரம் கோஷ்டிகள் செய்திருப்பது பொதுவெளியில் ஆவணப்பூர்வமாக அம்பலமாகும்.

இன்று புது தில்லியில் தொடங்கிய சோதனை அதில் கிடைக்கப்பெற்றிருக்கும் ஆவணங்கள் அவர்களின் தொடர்பில் இருந்தவர்கள் ஆதரவாளர்கள் என்று விசாரணை வளையம் விரிவாகும் போது நிச்சயம் அது இந்திய அளவில் இந்தியாவிற்கு எல்லைக்கும் வெளியேயும் பெரும் எல்லையில் விரிவடைய கூடும். அப்போது இந்திய எதிர்ப்பு சீன ஆதரவு என்ற பெயரில் இங்கு ஜனநாயகம் கருத்துச் சுதந்திரம் என்று போர்வையில் உலா வரும் எண்ணற்ற தேச விரோதிகளின் உண்மை முகம் அம்பலமாகும். செய்திகள் ஊடகங்கள் என்ற பெயரில் உள்நாட்டு துரோகத்தையும் அந்நிய ஆதரவையும் செய்து அதற்கு குரல் அற்றவர்களின் குரல் ஜனநாயகத்தின் குரல் என்று ஊடகத்தின் மாண்பை சிதைப்பவர்களின் உண்மையான நோக்கமும் புரியும். மத்திய அரசை எதிர்க்கிறேன் என்ற பெயரில் தேசத்தை எதிர்ப்பது. கட்சி அரசியல் எதிர்ப்பு என்பதற்கும் தேசிய எதிர்ப்பு என்பதற்கும் வித்தியாசம் தெரியாமல் தேசத்தின் பாதுகாப்பு இறையாண்மை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூட அத்துமீறுவது என்று இவர்களின் போலியான ஜனநாயகமும் ஊடக சுதந்திரமும் எந்த அளவிற்கு சீன ஆதரவு நிலைப்பாட்டிலும் அதன் பின்னணியில் எவ்வளவு பெரிய வலைப்பின்னல்கள் இருக்கிறது? என்பதும் அம்பலமாகும் .

சீன ஆதரவு நிலைப்பாட்டில் கருத்துருவாக்கம் செய்ய சீனாவிடம் பணம் பெற்றதாக நியூஸ் கிளிக் என்ற ஒரு செய்தி தளம் ஆவணப்பூர்வமாக இன்று பிடிபட்டிருக்கிறது. ஆனால் இன்னும் பல நூறு ஊடகங்களும் பல ஆயிரக்கணக்கான ஊடகவாதிகளும் திரை மறைவில் இதை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இது சம்பந்தமான கண்காணிப்புகளையும் உளவுப் பணிகளையும் மத்திய அரசு தீவிர படுத்தினால் மட்டுமே நாடு முழுவதிலும் இருக்கும் உள்நாட்டு துரோகத்தை வெளிக் கொணரமுடியும். குறிப்பாக ஜனநாயகம் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தேசத்திற்கும் தேசிய இறையாண்மைக்கும் எதிராக பொதுவெளிகளில் கருத்தியல் உருவாக்கும் செய்யும் அனைவரது பின்புலமும் சந்தேகத்தின் பெயரில் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும். அவர்களின் பின்புலமும் உள்நாட்டு துரோகம் அல்லது அந்நிய சதி என்ற ஏதோ ஒரு இழையில் நிச்சயம் இணைந்திருக்கும். இவர்களின் பொருளாதார மூலங்கள் பண பரிமாற்றங்கள் அனைத்தையும் தீவிரமான விசாரணைக்கும் கண்காணிப்புக்கும் உட்படுத்தினால் மட்டுமே இது போன்ற ஊடக பயங்கரவாதத்தையும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தேசவிரோத சிந்தனைகள் வளர்ப்பதையும் எதிர்காலத்தில் கட்டுப்படுத்த முடியும்.

தேசத்தின் தலைநகரத்திலேயே இந்த அளவிலான தேசவிரோதம் வேரூன்றி இருக்கும் எனில் திரும்பிய பக்கமெல்லாம் தேச விரோதத்தை நாயக பிம்பமாக கட்டமைத்துக் கொண்டிருக்கும் தமிழகத்திலும் தமிழகத்தில் இருக்கும் ஊடகங்கள் ஊடகவியலாளர்கள் மத்தியில் எந்த அளவில் தேசவிரோதம் வேருன்றி இருக்கும்? . கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அந்நிய சார்பு அரசியல் விமர்சனம் என்ற பெயரில் வெளிப்படும் தேச விரோதம் ஜனநாயகம் என்ற பெயரில் வெளிவரும் சீன பாசம் பிண்ணனி கொண்ட ஊடகங்கள் ஊடகவாதிகள் சமூக ஊடகங்கள் கருத்தியல் வரை தமிழகத்தில் மையம் கொண்டு செயல்படும் சீனா ஆதரவு கருத்தியலை கூர்ந்து கவனித்து பாருங்கள். சீன ஆதரவு நிலைப்பாடும் அதன் பின்னணியில் தேசத்தை சூழ்ந்து இருக்கும் பேர் அபாயமும் நமக்கு புரியும். தமிழகத்தில் பிரிவினை வாதமும் பயங்கரவாதமும் இவ்வளவு வலிமையாக பொருளாதார பின்புலம் கொண்டு செயல்படும் சூழ்ச்சி பிண்ணனி புரியும். தேசிய தலைநகரில் இன்று தொடங்கிய சோதனைகள் ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை வளையம் விரிவடையும் போது இமயம் முதல் குமரி வரை வேரூன்றி உள்ள சீன ஆதரவு கரங்கள் அம்பலமாகும்.


Share it if you like it