உலகின் மிக உயரமான சியாச்சின் மலை உச்சியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஷிவா சவுகானுக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கடலின் ஆழத்தில் துவங்கி அண்ணார்ந்து பார்க்கும் நிலவு வரை பெண்கள் சென்று சாதனை படைத்துள்ளனர். அவர்களால், முடியாதது என்று எதுவுமில்லை என்று சொல்லும் அளவிற்கு பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர்.
இதனிடையே, உலகின் மிக உயரமான மலைகளில் ஒன்றாக பார்க்கப்படுவது சியாச்சின். அந்தவகையில், 15 ஆயிரத்து 600 அடி உயரம் கொண்டது சியாச்சின். அந்த மலையின் உச்சியில், கேப்டன் ஷிவா சவுகான் என்ற பெண் அதிகாரி பாதுகாப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளார். பனிமலை ஏற்றம், பனிச்சரிவில் சிக்கியவர்களை காப்பாற்றுதல், பனிச் சரிவில் இருந்து தப்பிக்கும் முறை உள்ளிட்ட பல்வேறு விதமான தீவிர பயிற்சிக்குப் பிறகு அவர் அங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.