உடற்பயிற்சியினால் உடல் எடையை குறைத்து பதக்கத்தை வென்ற இந்திய மல்யுத்த வீரர் அமன் செராவத் !

உடற்பயிற்சியினால் உடல் எடையை குறைத்து பதக்கத்தை வென்ற இந்திய மல்யுத்த வீரர் அமன் செராவத் !

Share it if you like it

பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தம் 57 கிலோ ஆடவர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த அமன் செராவத் போர்ட்டோ ரிக்கோவின் டேரியன் டோய் குரூஸை 13-5 என்ற கணக்கில் தோற்கடித்து வெண்கல பதக்கத்தை வென்றார்.

ஆகஸ்ட் 8 ஆம் தேதி அமன் செராவத் வடக்கு மசிடோனியாவின் விளாடிமிர் எகோரோவ், ஜப்பானின் ஹிகுச்சி , அல்பேனியாவின் அபாகரோவ் ஆகியோரை எதிர்த்து அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் விளையாடினார். மூன்றாவது போட்டியின் முடிவுக்கு பின்னர் மாலையில், அமன் செராவத்தின் உடல் எடை 61 கிலோவாக இருந்தது. மறுநாள் காலை 57 கிலோ பிரிவில் போட்டி இருப்பதால் அவரின் உடல் எடையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் ஒரு நிமிடத்தை கூட வீணாக்காமல், பயிற்சியில் இறங்கினார். அவருடைய பயிற்சியாளர்கள் உதவி செய்தனர்.

முதலில் ஒன்றரை மணி நேரம் நின்றுகொண்டே மல்யுத்தத்தில் ஈடுபட்டார். பின்னர் 1 மணி நேரம் சூடான நீரில் குளித்தார். இதனை தொடர்ந்து உடற்பயிற்சி மையத்தில் எடை குறைக்கும் இயந்திரத்தில் ஓடினார்.

பின்னர் சிறிது நேரம் ஓய்வெடுத்து கொண்டு 5 நிமிட நீராவி குளியல் எடுத்து கொண்டார். இவ்வாறு இரவு முழுவதும் தூங்காமல் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு 900 கிராம் உடல் எடை கூடுதலாக இருந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு மசாஜ் செய்யப்பட்டது. அதன் பின்னர் ஜாகிங் செய்தார். பின்னர் சிறிது நேரம் நேரம் ஓட்டம் என நீண்ட நேரம் போராட்டத்துக்கு பிறகு அவருடைய உடல் எடை தேவையான அளவை விட 100 கிராம் குறைவாகவே இருந்தது. அதற்கு பிறகுதான் அமன் செராவத் மற்றும் அவரின் பயிற்சியாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் ஒரே ஆண் மல்யுத்த வீரராக செராவத் இருந்தார். கேடி ஜாதவ் (1952 இல் ஹெல்சிங்கியில் வெண்கலம்), சுஷில் குமார் (2008 இல் பெய்ஜிங்கில் வெண்கலம் மற்றும் லண்டனில் வெள்ளி 2012), யோகேஷ்வர் தத் (2012 இல் லண்டனில் வெண்கலம்), ரவி தஹியா (2012 இல் வெண்கலம்) ஆகியோருக்குப் பிறகு ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஆறாவது ஆண் மல்யுத்த வீரர் ஆனார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *