பாரதத்தின் கருப்பு நாள் : காங்கிரசின் முகத்திரையை கிழித்த மோடி !

பாரதத்தின் கருப்பு நாள் : காங்கிரசின் முகத்திரையை கிழித்த மோடி !

Share it if you like it

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி ஆட்சியமைத்துள்ள நிலையில் புதிய அரசு அமைந்ததற்குப் பிறகு நேற்று முதல் பாராளுமன்றக் கூட்டம் தொடங்கியது. தற்போது தொடங்கியுள்ள இந்த 18 வது பாராளுமன்றக் கூட்டத்தொடர் வரும் ஜூலை 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் கையில் இந்திய அரசியலமைப்பு சட்டப்புத்தகத்தைக் கையில் ஏந்தியபடி ராகுல் காந்தி, சோனியா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இண்டி கூட்டணி தலைவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்களும் அணிவகுத்தபடி பாராளுமன்றத்துக்குள் சென்றனர்.

இந்திய அரசியலமைப்பு என்று உள்ளதை காங்கிரஸ் இண்டி கூட்டணியினர் தற்போது தான் உணர துவங்கியுள்ளனர். ஜூன் 25 ஆம் தேதி 1975 ல் பிரதமராக இருந்த இந்திராகாந்தி இந்திய அரசியலமைப்பை எத்தனை முறை கலைத்தார். ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளி பல அரசியல் தலைவர்களை கைது செய்து பல அமைப்புகளை தடை செய்து அவரச நிலையை நாட்டில் நடைமுறைப்படுத்தினார்.

பல்லாயிரக்கணக்கானோர் நாடுமுழுவதும் காவல் துறையினரால் கைது செய்யபட்டனர். பல முக்கிய அரசியல் தலைவர்களான ஜெய பிரகாஷ் நாராயண், ராஜ் நாராயண், மொரார்ஜி தேசாய், சரண் சிங், ஜிவத்ராம் கிருபாலனி, அடல் பிகாரி வாஜ்பாய், லால் கிருஷ்ண அத்வானி, பல பொதுவுடமைவாதிகள், பொதுவுடமைக் கட்சித் தலைவர்கள், இன்னும் இதர கிளர்ச்சியாளர்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் என் கருதப்பட்டவர்களும் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அரசியல் கட்சி சாரா அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ் போன்ற தேசியவாத அமைப்புகளும் தடை செய்யபட்டன.

அவசர காலங்களில் மக்கள் பல்வேறு இன்னல்களை மேற்கொண்டனர் :-

குடும்பங்களுக்கு தகவல் கொடுக்காமல் காவலர்களால் மக்கள் கைது செய்யப்பட்டது.

கைதிகள் மற்றும் அரசியல் கைதிகள். சித்திரவதை செய்யப்பட்டது.

தூர்தர்ஷன் போன்ற பொது மற்றும் தனியார் ஊடக நிறுவனங்களின் தேசிய தொலைக்காட்சி வலையமைப்புகளை அரசு பிரசாரம் செய்ய பயன்படுத்திக் கொண்டது.

கட்டாய கருத்தடை.

ட்ருக்மென் கேட்,பழைய தில்லி மற்றும் ஜமா மஸ்ஜித் பகுதியில் வாழ்ந்த குடிசை வாழ் மக்களின் வீடுகள் அழிக்கப்பட்டது.

பெரிய அளவிலான சட்டவிரோத செயல்கள் அரங்கேற்றியது.

நாட்டின் அனைத்துப் பத்திரிகைகளும்,செய்தி ஊடகங்களும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, மத்திய அரசுக்கு எதிரான செய்திகள் நீக்கப்பட்டு வெளியிடப்பட்டது அல்லது தடை செய்யப்பட்டது.

மத்திய அரசை ஆதரித்து அரசின் செலவில் விளம்பரமும் பிரச்சாரமும் மேற்கொண்டது.

ஆனால் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். அவர் ஒவ்வொரு முறை பதவி ஏற்கும்போதும் இந்திய அரசியலமைப்பு புத்தகத்தை வணங்கிவிட்டு பின்னர் பதவி ஏற்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் எந்தவித அவப்பெயரும் இல்லாமல் இந்திய பொருளாதாரத்தை மிக உயர்ந்த இடத்தில் கொண்டு சென்று விட்டார்.

அவசர நிலையை இந்திராகாந்தி நடைமுறைப்படுத்திய நாளான இன்று பிரதமர் மோடி அவருடைய எக்ஸ் பதிவில், அவசரகாலத்தின் இருண்ட நாட்கள் என்பது ஒவ்வொரு இந்தியனும் பெரிதும் மதிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எப்படி காங்கிரஸ் கட்சி அடியோடு தகர்த்தது என்பதை நினைவூட்டுகிறது.

ஆட்சியைப் பிடித்துக் கொள்வதற்காக, அப்போதைய காங்கிரஸ் அரசு ஒவ்வொரு ஜனநாயகக் கொள்கையையும் புறக்கணித்து, தேசத்தை சிறைக்குள் ஆக்கியது. காங்கிரஸுடன் உடன்படாத எந்தவொரு நபரும் சித்திரவதை செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். நலிந்த பிரிவினரை குறிவைத்து சமூக ரீதியாக பிற்போக்குத்தனமான கொள்கைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

எமர்ஜென்சியை விதித்தவர்களுக்கு நமது அரசியலமைப்புச் சட்டத்தின் மீது தங்கள் அன்பை வெளிப்படுத்த உரிமை இல்லை. எண்ணற்ற சந்தர்ப்பங்களில் 356-வது பிரிவை திணித்தவர்கள், பத்திரிகை சுதந்திரத்தை அழிக்கும் மசோதாவைப் பெற்றவர்கள், கூட்டாட்சி முறையை அழித்தவர்கள் மற்றும் அரசியலமைப்பின் அனைத்து அம்சங்களையும் மீறியவர்கள் இவர்கள்தான்.

எமர்ஜென்சியை அமுல்படுத்துவதற்கு வழிவகுத்த மனநிலை, அதை திணித்த அதே கட்சியினரிடையே மிகவும் உயிர்ப்புடன் இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான வெறுப்பை அவர்கள் தங்கள் டோக்கனிசத்தின் மூலம் மறைக்கிறார்கள், ஆனால் இந்திய மக்கள் அவர்களின் கோமாளித்தனங்களை பார்த்திருக்கிறார்கள், அதனால்தான் அவர்களை மீண்டும் மீண்டும் நிராகரித்தனர். இவ்வாறு பிரதமர் மோடி காங்கிரசை விமர்சித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களும் காங்கிரஸ் அரசை கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1975-ம் ஆண்டு நாட்டில் அவசரநிலைப் பிரகடனம் எனும் எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டதன் 50-வது ஆண்டு இன்று. இந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ரவி வெளியிட்டுள்ள செய்தியில், நமது தேசிய வரலாற்றின் இந்த கருப்பு அத்தியாயத்தை யாரும் நினைத்துக்கூட பார்க்காத வகையில் நமது தாய்நாட்டின் கண்ணியத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான உறுதியுடன் இந்த நாளில் துக்கம் அனுசரிப்போம் என அழைப்பு விடுத்துள்ளார்.

50 ஆண்டுகளுக்கு முன்பு, ஜூன் 25, 1975 அன்று இந்த கருப்பு தினத்தில், அரசியலமைப்பை தூக்கியெறிந்தும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கியும், ஊடகங்களின் வாயைக் கட்டியும், நீதித்துறையை அடக்கிய சர்வாதிகாரியின் காலடியிலும் நமது ஜனநாயகம் எவ்வாறு நசுக்கப்பட்டது என்பதை தேசம் அதிர்ச்சியுடனும் திகிலுடனும் நினைத்துப் பார்க்கிறது. ஆயுதமேந்திய ராணுவத்தினர் எங்கள் விடுதிக்குள் புகுந்து, விடுதி அறைகளை உதைத்து திறந்து, ரைஃபிள் துப்பாக்கியின் பின்பக்கத்தால் தாக்கி, புத்தகங்கள், உடைகளை கூட எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் எங்களை உடனடியாக வெளியேற்றிய நாளை நானும் எனது பல்கலைக்கழக நண்பர்களும் எப்படி மறக்க முடியும்? சொந்தப் பிள்ளைகளாலேயே முதுகில் குத்தப்பட்டு பாரத மாதா கண்ணீர் வடித்த நாள் அது. நமது தேசிய வரலாற்றின் இந்த கருப்பு அத்தியாயத்தை யாரும் நினைத்துக்கூட பார்க்காத வகையில் நமது தாய்நாட்டின் கண்ணியத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான உறுதியுடன் இந்த நாளில் துக்கம் அனுசரிப்போம். இவ்வாறு ஆளுநர் ரவி குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *