மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் அமித் ஷா பேசியதாவது: இண்டியா கூட்டணி கட்சிகளால் மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. 9 ஆண்டுகளில் சொன்னதை பிரதமர் மோடி செய்திருக்கிறார். ஏழைகளுக்காக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
ஏழைகளின் நலன் பற்றி காங்கிரஸ் பேசுகிறது. அவர்கள் வறுமையை ஒழிக்கவில்லை. மத்திய பிரதேசத்தில் மட்டும் 93 லட்சம் விவசாயிகளின் கணக்குகளுக்கு 6000 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தால், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், வரும் நாட்களில் 10 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படும். 11வது இடத்தில் இருந்த இந்தியப் பொருளாதாரம், கடந்த 9 ஆண்டுகளில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்த போது மத்திய பிரதேசத்திற்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது?. கமல்நாத், திக்விஜய் சிங் தனது மகன்களை முதல்வராக்க விரும்புகிறார். சோனியா தனது மகன் ராகுலை பிரதமராக்க விரும்புகிறார். இவ்வாறு அமித்ஷா பேசினார்.