புகார் அளித்தும் அலட்சியம் : பறிபோன 3 உயிர்கள்  !

புகார் அளித்தும் அலட்சியம் : பறிபோன 3 உயிர்கள் !

Share it if you like it

புதுச்சேரியில் உள்ள ரெட்டியார்பாளையம் பகுதியில் வசித்து வந்த 72 வயதான மூதாட்டி செந்தாமரை தன் வீட்டின் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது மகள் அலறல் சத்தம் கேட்டு அவரை மீட்பதற்காக மகள் காமாட்சி சென்ற போது அவரும் திடீரென மயங்கி விழுந்தார். இருவரையும் காப்பாற்ற சென்ற காமட்சியின் மகள் பாக்கியலட்சுமியும் அங்கேயே மயங்கி விழுந்தார்.

மூன்று பேரின் அலறல் சத்தமும் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்க சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மூன்று பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீஸார், வருவாய்த் துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர், உள்ளிட்டோர் வட்டாட்சியர் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது பாதாள சாக்கடை சில நாட்களாக அடைத்திருப்பதாகவும், பலமுறை நகராட்சிக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனை தொடர்ந்து சாக்கடையிலிருந்து விஷ வாயு பரவி இருக்கலாம் என அதிகாரிகள் கூறினர். இதை தொடர்ந்து உயிரிழத்தவர்களின் அருகில் வசிப்பவர்களை காலி செய்து விட்டு வேறு இடம் செல்லுமாறு அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

பாதாள சாக்கடையில் தேங்கியுள்ள நீரை அகற்றவும், அடைப்புகள் உள்ளதா என ஆய்வு செய்யவும் வருவாய் துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *