மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சுடுகாட்டில் பதுங்கி இருந்த ரோஹிங்கியா முஸ்லீம்களை, பஜ்ரங்தள் காரியகர்த்தாக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்திருக்கிறார்கள்.
பங்களாதேஷிலிருந்து ரோஹிங்கியா முஸ்லீம்கள் இந்தியாவுக்குள் ஊடுருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ரோஹிங்கியா முஸ்லீம்கள் சட்ட விரோதமாக அதிகளவில் குடிபெயர்ந்திருக்கிறார்கள். இவர்கள்தான் ஹிந்து பண்டிகைகளின்போது கல்வீசி தாக்கி கலவரத்தில் ஈடுபடுகிறவர்கள். தற்போது மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் ரோஹிங்கியாக்கள் ஊடுருவி வருகிறார்கள்.
அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூருக்குள் ஊடுருவிய ரோஹிங்கியா முஸ்லீம்கள் சுமார் 20 பேர், நீண்ட காலமாக அப்பகுதியிலுள்ள சுடுகாடு ஒன்றில் பதுங்கி இருந்திருக்கிறார்கள். இந்த விஷயம் அப்பகுதியைச் சேர்ந்த பஜ்ரங்தள் காரியகர்த்தாக்களுக்கு தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பஜ்ரங்தள் காரியகர்த்தாக்கள், ரோஹிங்கியா முஸ்லீம்கள் 20 பேரையும் பிடித்து, போலீஸாரை வரவழைத்து ஒப்படைத்திருக்கிறார். மேலும், ரோஹிங்கியாக்களிடம் இருந்து 4 கைத்துப்பாக்கிகளையும், வாள் ஒன்றையும் கைப்பற்றி இருக்கிறார்கள்.