அசுரர்களை சூரசம்ஹாரம் செய்த முருகப் பெருமான் சன்னிதியில் அக்கிரமம் !

அசுரர்களை சூரசம்ஹாரம் செய்த முருகப் பெருமான் சன்னிதியில் அக்கிரமம் !

Share it if you like it

தூத்துக்குடி: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம்படை வீடாக போற்றப்படும் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று கடற்கரையில் நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு அலைகடலென திரண்டுள்ளதால் எங்கும் அரோகரா முழக்கம் எதிரொலிக்கிறது.

சூரசம்ஹாரம்: முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார்.

அலைகடலென திரண்ட பக்தர்கள்: முருகனின் வருகையை எதிர்பார்த்து கடற்கரையில் காத்திருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானை கண்டதும் கந்தனுக்கு அரோகரா.. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்று வெற்றி முழக்கமிட்டு வரவேற்பு அளிப்பார்கள். இதனையடுத்து அசுரர்களை சம்ஹாரம் செய்வார் ஜெயந்தி நாதர். ஆண்டுதோறும் இந்த விழா திருச்செந்தூரில் நடைபெற்றாலும் அதனைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தருகின்றனர். இதனால் அங்கு கூட்டநெரிசல்கள் கட்டுக்கடங்காமல் காணப்படுகிறது.

இந்நிலையில் ரூ. 100 ஆக இருந்த விஸ்வரூப தரிசன கட்டணம் ரூ. 2,000 ஆகவும், ரூ. 100 ஆக இருந்த சிறப்பு தரிசன கட்டணம் ரூ. 1,000 ஆகவும், ரூ. 500 ஆக இருந்த அபிஷேக கட்டணம் ரூ. 3,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது முருகப் பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தமிழ் நிலத்தின் தனிப்பெரும் தெய்வமான முருகப் பெருமானை வழிபட வந்த பக்தர்களின் நலன்பொருட்டு கட்டண உயர்வை கண்டித்து இந்து முன்னணியினர் போராடியுள்ளனர். அவர்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கும் காணொளியானது தற்போது சங்க வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

https://x.com/BJP4TamilNadu/status/1725808439707029714?s=20


Share it if you like it