காம பாதிரியாரின் முகத்திரையை கிழித்த கன்னியாஸ்திரிக்கு இழைக்கப்பட்ட அநீதி..!

காம பாதிரியாரின் முகத்திரையை கிழித்த கன்னியாஸ்திரிக்கு இழைக்கப்பட்ட அநீதி..!

Share it if you like it

கேரள மாநிலம் குருவிளங்காடு என்னும் பகுதியில் உள்ள தேவாலயத்தில் 2014 முதல் 2016 வரை பிஷப்பாக பிராங்கோ மூலக்கல் பணியாற்றிய பொழுது. தேவாலயத்தில் உள்ள கன்னியாஸ்திரிகளுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த நிலையில், பிஷப் மீது எவரும் புகார் தெரிவிக்காத நிலையில் ஒரே ஒரு கன்னியாஸ்திரி மட்டும் தைரியமாக பிஷப் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால் வழக்கம் போல் மீடியாக்களும், அங்குள்ள கம்யூனிஸ்ட் அரசும் பிஷப் மீது மென்மையான போக்கையே மேற்கொண்டது. இதனால் பிஷப் மீது நடவடிக்கை எடுத்து ஆக வேண்டும் என கன்னியாஸ்திரி போராட்டத்தில் ஈடுப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிலைமை எல்லை மீறியதை அடுத்து அவர் மீது கேரள மாநில காவல்துறையினர் 6 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்தனர்.

சிறிது நாட்களிலேயே தன் செல்வாக்கை பயன்படுத்தி கொண்டு இன்று வரை காம பாதிரியார் சுதந்திரமாக வெளியில் சுற்றிக் கொண்டு இருக்கிறார் என்பது அனைவரின் கருத்தாக இருந்து வருகிறது. பாதிக்கப்பட்ட தனக்கு நீதி வேண்டும் என்று இறுதி வரை போராடிய கன்னியாஸ்திரி லூசி கலப்புராவிற்கு., பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபை அவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

‘உங்கள் பதவி நீக்கத்தை எதிர்த்து முறையீடு செய்யக் கத்தோலிக்க சபைக்குள் எந்தச் சட்ட வழிகளும் இனி இல்லை. எப்.சி.சி.,யின் உறுப்பினராக நீங்கள் இனிமேல் தொடர்வதற்கான உரிமை இல்லை. இதனால் இனி நீங்கள் பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையின் கான்வென்ட்களில் தங்குவது சட்ட விரோதமானது’ என்று திருச்சபை கூறியிருப்பது அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

 


Share it if you like it