ஹிந்து கடவுளை இழிவுப்படுத்திய பெண் இயக்குனருக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார் பிரபல நடிகையும் பா.ஜ.க மூத்த தலைவருமான குஷ்பு என்பது குறிப்பிடத்தக்கது.
மாடத்தி, செங்கடல் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் லீனா மணிமேகலை. இவர், திராவிடர் கழகத்தின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. அந்தவகையில், இவரது டாக்குமென்டரி படம் தான் ‘காளி’. இப்படத்தின், பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி இருந்தது. அந்தவகையில், இந்த போஸ்டர் ஹிந்துக்கள் மத்தியில் கடும் கோவத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதில், காளி வேடம் அணிந்த பெண்மணி ஒருவர் சிகரெட் புகைப்பது போன்றும், தனது கையில் ஓரினச் சேர்க்கையாளர்களின் கொடியை பிடித்து இருப்பது போன்று இந்த போஸ்டர் அமைந்து இருக்கிறது.
கோடிகணக்கான ஹிந்துக்களின் வழிபாட்டுக்குறிய காளி தெய்வத்தை இழிவுப்படுத்திய லீனா மணிமேகலைக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இதுதவிர, “அரெஸ்ட் லீனா மணிமேகலை” என்ற ஹேஷ்டாக் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில் தான், பா.ஜ.க மூத்த தலைவரும் பிரபல நடிகையுமான குஷ்பு, படைப்பாற்றலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதே படைப்பாளிகள் கடவுளை இப்படி சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என தனது கடும் கண்டனத்தை ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார்.