இந்தியாவின் தலைமையைத்தான் நம்புகிறோம்: பன்னாட்டு நிதியம் நம்பிக்கை!

இந்தியாவின் தலைமையைத்தான் நம்புகிறோம்: பன்னாட்டு நிதியம் நம்பிக்கை!

Share it if you like it

கொரோனா மற்றும் உக்ரைன் போரால், பொருளாதார மந்தநிலை மற்றும் சமூக நெருக்கடிகளை உலகம் தொடர்ந்து சந்தித்து வரும் நிலையில், ஜி 20 அமைப்பில் இந்தியாவின் தலைமையைத்தான் சர்வதேச சமூகம் பெரிதும் நம்புகிறது என்று பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்திருக்கிறார்.

ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை 2022 டிசம்பர் 1-ம் தேதி முதல் இந்தியா ஏற்றிருக்கிறது. இந்தோனேசியாவின் பாலி நகரில் நடந்த நிகழ்ச்சியில், இப்பொறுப்பை அந்நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோ, பாரத பிரதமர் நரேந்தி மோடியிடம் ஒப்படைத்தார். 2023 நவம்பர் 30-ம் தேதி வரை இந்தியாதான் ஜி 20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும். இந்த சூழலில், 2020 – 2021-ம் ஆண்டு உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் மற்றும் 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் நடந்து வரும் ரஷ்யா – உக்ரைன் போர் ஆகியவை காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் மந்தநிலையில் இருந்து வருகிறது. மேலும், உலக நாடுகள் சமூக நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது.

அதேசமயம், உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி சராசரியை விட அதிக வளர்ச்சியை இந்தியா கண்டிருக்கிறது. இந்த சூழலில்தான், பொருளாதார மந்தநிலை மற்றும் சமூக நெருக்கடிகளை உலகம் தொடர்ந்து சந்தித்து வரும் நிலையில், ஜி 20 அமைப்பில் இந்தியாவின் தலைமையைத்தான் சர்வதேச சமூகம் பெரிதும் நம்புகிறது என்று பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஜி 20 அமைப்புக்கு இந்தியாவின் தலைமையைத்தான் நாங்கள் அதிகம் நம்புகிறோம். ஏனெனில், ஒருங்கிணைந்த உலக பொருளாதாரத்தை பாதுகாப்பதன் வாயிலாக, தங்களது சொந்த நலனையும் உலகநாடுகள் பாதுகாத்துக் கொள்வதற்கு இது ஒரு முக்கியமான நேரமாகும்.

இந்தியா நம்மை ஒன்றாக முன்வைத்து, அந்த மிகப்பெரிய உலகளாவிய சேவையை செய்யும் என்று நம்புகிறேன். இந்தியா மிகச் சிறப்பாக செயல்படுவதை எப்படி நாம் அறிந்து கொள்கிறோம் என்றால், கொரோனா பரவலால் துரிதப்படுத்தப்பட்ட அதன் டிஜிட்டல் மயமாக்கம், பொதுக் கொள்கை மற்றும் தனியார் துறை வளர்ச்சி ஆகிய இரண்டிற்கும் எப்படி பயனுள்ளதாக இருந்தது என்பதை வைத்துத்தான். நான் இன்று இந்தியாவில் இருந்தால், உள்நாட்டு காரணிகள் என்ன என்பதைவிட, உலகின் பிற பகுதிகளில் என்ன நடக்கிறது. அது என்னை எவ்வாறு பாதிக்கப் போகிறது என்பது குறித்துத்தான் அதிகம் கவலைப்படுவேன்” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it