சென்னையில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவிற்கு சென்றுக் கொண்டிருந்த ஆலப்பி விரைவு ரயிலில் நிகழ்ந்த சம்பவம்தான் இது. ஈரோடு ரயில் நிலையத்தில் முன்பதிவு பெட்டியில் ஏறிய இளைஞர்கள் சிலர் கழிவறை வாயிலில் அமர்ந்து புகை பிடித்த படியும், சத்தமாக பாடல்களை பாடியும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்துள்ளனர்.
இதனால் அதிருப்தி அடைந்த பயணிகள், இளைஞர்களிடம் இதுதொடர்பாக கேட்ட போது, மதுபோதையில் இருந்த அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் பயணிகளுக்கு மிரட்டல் விடுத்துவிட்டு, திருப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி சென்றுவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை பகிர்ந்த பாதிக்கப்பட்ட ரயில் பயணிகள், நிகழ்வின் போது ரயில்வே காவலர்கள், டிக்கெட் பரிசோதகர்கள் என யாரும் உதவ வரவில்லை என வேதனை தெரிவித்தனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட ரயில் பயணிகள் கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களில் இருவரை கைது செய்த ரயில்வே காவலர்கள், மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் போதை பொருள்களின் புழக்கம் அதிகரித்துவிட்டது என்று பிரபல பின்னணி பாடகி சுசித்ரா தெரிவித்திருந்தார். தொடர் கொள்ளையும் தமிழகத்தில் ஆங்காங்கே அரேங்கேறி கொண்டிருப்பதை நாம் செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் அடிக்கடி பார்த்திருப்போம். இதுமட்டுமல்லாமல் பள்ளி குழந்தைகளை வைத்தி விபச்சாரம் செய்து வந்தவர்களை கைது செய்த சம்பவத்தையும் நாம் கேட்டிருப்போம். திமுக அரசானது சமூக வலைத்தளங்களில் திமுக வுக்கு எதிராக பதிவுகளை போடுபவர்களை கைது செய்வதை விட்டுவிட்டு கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் செய்பவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.