குஜராத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார். அப்போது, உலக அளவில் முதலீடு செய்வதற்கான சிறந்த இடமாக இந்தியா மாறியுள்ளதாகவும், இந்தியாவில் முதலீடு செய்ய சிறந்த இடமாக குஜராத் உள்ளதாக தெரிவித்தார்.
பல மாநிலங்கள் குஜராத்தின் தொழில்துறை மாதிரியை பின்பற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.பிரதம்ர் மோடி குஜராத்தை கொள்கை சார்ந்த மாநிலமாக மாற்றிய விதம் மற்றும் பூபேந்திர பாய் அதை முன்னெடுத்துச் சென்ற விதத்தையும் அவர் நினைவுகூர்ந்தார். உலக முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவார்கள் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குஜராத்தி தொழிலதிபர்கள் வடக்கு நோக்கி முதலீடு செய்ய விரும்பினால் காஷ்மீரில் முதலீடு செய்யுங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் காஷ்மீரை பிரதான நீரோட்டத்தில் மாற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியை ஆதரிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.