Share it if you like it
ஐக்கிய அமீரக ஏமிரேட்சின் அபுதாபியில் பாப்ஸ் அமைப்பு சார்பில் பிரமாண்டமான முறையில் இந்து கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் 2024 பிப்ரவரி மாதம் திறக்கப்பட இருக்கிறது.
இந்த நிலையில் கோவில் நிர்வாகிகள் பிரதமர் மோடியை சந்தித்து திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வழங்கினார்கள்.
அதனை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். முன்னதாக கோவில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் குழுவினருக்க பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
அபுதாபியிலிருந்து 30 நிமிடம் மற்றும் துபாயிலிருந்து 45 நிமிட பயண தூரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே மிகப் பெரிய இந்து மத வழிபாட்டு தலமாக உள்ளது.
Share it if you like it