பொது இடங்களில், ஹிஜாப் அணியாத பெண்களைக் கண்காணிப்பதற்காக ஈரான் அரசு கேமரா வைத்துள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம், உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து ஈரான் காவல்துறையினர் கூறியதாவது ; “பொது இடங்களில் ஹிஜாப் அணியாத பெண்கள் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்படும். ஹிஜாப் அணியாமல் பொதுவெளிக்குச் சென்றால் என்ன விளைவுகள் ஏற்படும் என்றும் அவர்களுக்கு தெரிவிக்கப்படும். இதன்மூலம், ஹிஜாபை எதிர்ப்பது குறையும்” என்று தெரிவித்துள்ளனர். ஈரான் அரசின் இந்த நடவடிக்கை அந்நாட்டு பெண்கள் மத்தியில் பெரும் கோவத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஈரானின் இந்தச் செயலுக்கு சர்வதேச நாடுகள், பெண்கள் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.